பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, April 22, 2014

நீர்கொழும்பை அதிர்ச்சியடையச் செய்துள்ள முகமூடி நபர்களின் தொடர் கொள்ளை - எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக்கட்டுரை (22-4-2014) இன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன் பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;,  கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு   என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு மாநகரம் பிரபல்யம் பெற்றது.

அதுமட்டுமன்றி கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம். சுதந்திர வர்த்தக வலயம் என்பனவும் நகரை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ளன.
சின்ன ரோம் எனறு அழைக்கப்படு;ம் நீர்கொழும்பு நகரம் தற்போது  இன்னொரு விடயத்திலும் பிரபல்யம் பெற்று வருகிறது. சிக்காகோ நகரை விஞ்சும் வகையில்  ஆயுதம் தாங்கிய முகமூடி கொள்ளையர்களின் கை வரிசைக்கு அடிக்கடி ஆளாகும் நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது.
ஆம். இந்த வருடத்தின் நான்கு மாதங்களில்  நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நான்கு பிரதான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலாவது சம்பவம் சீதுவை ரயில் கடவை அருகில் நிலேகா ஜுவலரியில் இடம் பெற்றது. இரண்டாவது சம்பவம் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுவல் லங்கா எனும் பிரபல நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி  பகல் வேளையில் இடம் பெற்றது. இதன் போது இரண்டு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வெளிநாட்டு பணம் முகத்தை முழுமையாக மூடி வந்த நான்கு ஆயததாரிகளால் கொள்ளையிடப்பட்டது.
இந்தப் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் மேல் மாகாண சபை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக  தேடப்பட்டு வரும் இன்னொரு சந்தேக நபர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாகவும். சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிடப்பட்ட  பணம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்படவில்லை எனவும். அதில் ஒரு சிறிய தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவிக்கிறார்.






இந்நிலையில், மூன்றாவது  கொள்ளைச் சம்பவம் சீதுவை லியனகே முல்லை. 18 ஆம் கட்டையில் அமைந்துள்ள  24 மணிநேரம் சேவையில் ஈடுபடும் .  கொமர்ஷல் வங்கியில் 31-3-2014 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது  ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வர், வங்கி முகாமையாளரை  கத்தியால் குத்திவிட்டு 15 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றனர்.
தற்போது  நான்காவது கொள்ளைச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி (174-2014) இரவு 7.30 மணியளவில்   நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமான புஷ்பா ஜுவலரியில்; இடம் பெற்றுள்ளது.





புஷ்பா ஜுவலரியில் என்ன நடந்தது?



சிங்கள தமிழ் புத்தாண்டு இடம் பெற்ற  கடந்த வாரத்தில்  வியாழக்கிழமை அன்று (17) இரவு 7.30 மணியளவில்  கடையை மூடுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்கள் சிலரும் கடையில் இருந்தனர்.
அவ்வேளை, திடீரென சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்தது போன்று  முகத்தை முழுமையாக  மூடும் ஹெல்மட் அணிந்தபடி துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் அறுவர் கடையினுள் புகுந்தனர்.

முதல் தாக்குதல் கடையின் பாதுகாப்பு ஊழியரான சிங்கராஜா மீது மேற்கொள்ளப்பட்டது. நிராயுதபாணியான வயதான அந்த நபரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரைத் தாக்கி உள்ளே தள்ளியபடி சென்ற ஆயததாரிகள் தாங்கள்; வந்த வேளையை துரித கதியில் ஆரம்;பித்தனர்;.
ஆயததாரிகளில் ஒருவன்  வெளிநாட்டு நாணய மாற்றுப் பகுதிக்குச் சென்று  அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு வெளிநாட்டுப் பணத்தை தயாராக கொண்டு வந்த பையினுள் போட ஆரம்பித்தான். இன்னொருவன் ஆயத முனையில் நகைகளை பையினுள் போட்டுக் கொண்டான். இதற்கிடையில் வாயிலில் ஒருவன் காவலிருந்தான். இன்னொருவன் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரை துப்பாக்கியினால்  தாக்கினான். இதற்கிடையில் சிவப்பு நிற ரீ சேர்ட்; அணிந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர் கடையினுள் நுழைகிறார். அவர்  ஹெல்மட் அணிந்திருக்கவில்லை. ஆயததாரிகளும் அவரை ஒன்றும் செய்யவில்லை? கொள்ளையர்கள் வெளியேறும் போது துப்பாக்கி வேட்டுக்கள் இரண்டினை பிரயோகித்தபடி தாம்; வந்த  மூன்று மோட்டார் சைக்கிள்களிலும்  தப்பிச் சென்றனர்.

அவர்கள் செல்லும் பொது கொள்ளையடித்த நகைகளில் சில  பையிலிருந்து வெளியே விழுகின்றன. பிறகு அவை ஊழியர்களால்  கண்டெடுக்கப்படுகின்றன.
 இரவு 7.30  மணிக்கு ஆரம்பமான ஒப்பரேசன்; (கொள்ளைச் சம்பவம்)  7.34 மணிக்கு வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள்  நான்கு நிமிடங்களில் கொள்ளையடிக்கப்படுகின்றன..
  நகை கடையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறும் போது இன்னொரு விடயமும் நடைபெறுகிறது. ஆம். நகை கடையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறும் போது கடையின் உரிமையாளரான எம். ஏகாம்பரம் மெதுவாக  நழுவி  கடை வாசல்  வழியாக வெளியே வந்து அடுத்த கடைக்குள் நுழைகிறார். அது 'பாமா ஜுவர்ஸ்.திரு. ஏகாம்பரத்தின் அண்ணன்  ஜெயராமனுடைய கடை அது. உடனடியாக பொலிஸ் அவசர பிரிவிற்கு (119)  அந்தக் கடையின் ஊழியர்களால் அழைப்பு எடுக்கப்பட்டு கொள்ளை தொடர்பில்  அறிவிக்கப்படுகிறது. இவையாவும் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

நகை கடையின் காவலாளி சிஙகராஜா இது பற்றி தெரிவிக்கையில்.



துப்பாக்கிகளுடன் ஆறுபேர் கடையினுன் நுழைந்தனர். வெளியில் காவலில் இருந்த என்னை ஒருவர் தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட்டார் மற்றையவர் நகைகளை கொள்ளையிட்டார். அவர்கள் தாம் கொண்ட வந்த துணியினால் தைக்கப்பட்ட பையினுள்; அதனை போட்டனர். சம்பவம் இடம்பெறும் போது வாடிக்கையாளர்கள் ஏழு பேரும், ஊழியர்கள் 24 பேரும் கடையினுள் இருந்தனர். கொள்ளைர்கள் கடையை விட்டு வெளியேறும் போது  கடைக்கு வெளியே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபடி மோட்டார்; சைக்கிளில் தப்பிச் சென்றனர். அவர்;கள் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்றார்.

இதேவேளை. இச்சம்பவத்திற்கு ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கல்கட்டஸ் ரக துப்பாக்கி இரண்டும் , ரிவோல்வர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடைக்கு வெளியே துப்பாக்கிச் சன்னங்கள் மூன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு  வருகை தந்தனர்.
சம்பவம் தொடர்பாக  மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றன.


புஸ்பா ஜுவலரி உரிமையாளர் எம். ஏகாம்பரம் கொள்ளைச் சம்பவம் பற்றி கூறுவதென்ன?



நீர்கொழும்பிலில் 45 வருட காலமாக வர்த்தகம் செய்த தமக்கு தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை நகரில் அதிகரித்துள்ளது என்று  அவரது இல்லத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் புஸ்பா ஜுவலரி உரிமையாளர் எம்.ஏகாம்பரம்  தெரிவித்தார்.

அவர்  கொள்ளைச சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கூறியதாவது, கடந்த  பெப்ரவரி மாதம்  17 ஆம் திகதி நீர்கொழும்பிலுள்ள பிரசித்தமான நகை கடையான 'ஜுவல் லங்காமோட்டார் சைக்கிளில் வந்த ஆயததாரிகளால் பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டது. அதே பாணியிலேயே எமது கடையும்  ஏப்ரல் 17 ஆம் திகதி ஆறு பேரை கொண்ட ஆயுததாரிகளால்  இரவு வேளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எமது நகரில் பொலிஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும.அப்போதுதான் வர்த்தகர்கள் அச்சமின்றி வியாபாரம் செய்வார்கள். வாடிக்கையாளர்களும் அச்சமின்றி கடைக்கு வருவார்கள். இந்த சம்பவத்தில் எனதும் ஊழியர்களதும் உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நாங்கள் யாருக்கும் தீங்கு செய்தவர்கள் அல்ல என்றார்.


அபாயகரமான நிலையில் நீர்கொழும்பு நகரின் பாதுகாப்பு


பல்லினங்களையும் பல மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் நீர்கொழும்பு  மாநகரின் பாதுகாப்பு அபாயகரமான நிலையில் இருப்பதாக நகரத்தைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள்; சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக கொள்ளைச் சம்பவங்களும் திருட்டுச் சம்பவங்களும், நகை பறிப்புச் சம்பவங்களும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறுவதாகவும், முடிச்சுமாறிகளின் கைவரிசை இருப்பதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ச்சியாக  வர்த்தக நிலையங்களில் இடம்பெறும் ஆயத முனையிலான கொள்ளைச் சம்பவங்களை அடுத்து வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு நீர்கொழும்பு நகரம் பிரசித்தமானது. இங்குள்ள பலருக்கு வெளிநாட்டவர்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது.   ஆயினும், இங்கு வரும் வெளிநாட்டவர்களின் பணம் மற்றும் உடைமைகள்பறித்துச் செல்லப்படும் சம்பவங்களும், திருடப்படும் சம்பவங்களும்,  இடம்பெறுவதாக  ஹோட்டல் துறையில் ஈடுபடுவோர் சிலர் தெரிவிக்கின்றனர். நகரின் வர்த்தகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியாக பொலிஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆயுத முனையில் கொள்ளச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமாயின் வாடிக்கையாளர்கள்  அந்த நிலையங்களுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


நீர்கொழும்பு நகர பாதுகாப்புக்கு விஷேட நடவடிக்கை

 இதேவேளை, நீர்கொழும்பு புஷ்பா ஜுவலரி கொள்ளையை அடுத்து நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதேச அரசியல் தலைமைகள், பொலிஸார், வர்த்தகர்கள், நிறுவனத் தலைவர்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

நகரில் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த சனிக்கிழமை (19-4-2014) முற்பகல் நீர்கோழும்பு பொலிஸ் நிலையத்தின் பிரதான மண்டபத்தில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
  நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு  ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடுவதற்காக  பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட கூட்டத்திற்கு நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் அதிகாரத்திற்குட்;பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரச, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தது.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, மேல் மாகாண அமைச்சர் நிமல் வலான்ஸா, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாத்திற்குட்;பட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகள், பிராந்திய பொலிஸ்  உதவி அத்தியட்சகர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர.;
   இந்தக் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்;மானத்தின் அடிப்படையில் நகரின் பிரதான சுப்பர் மார்க்கட்டின் மேல் பகுதியில்  24 மணித்தியாலங்களும் செயற்படும் விசேட பொலிஸ் பாதுகாப்பு கண்காணிப்பு  பிரிவை அமைப்பதெனவும்,  அந்த பிரிவிற்கு நவீன வசதிகளை  செய்து கொடுப்பதெனவும், நகரின் வர்த்தக பிரதேசங்களிலும், சுற்றுலாத்துறை அமைந்துள்ள பிரதேசங்களிலும்  சிசிரிவி கெமராக்களை பொருத்துவதெனவும், அந்த கமராக்களை  விரைவில் அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் பாதுகாப்பு கண்காணிப்பு  பிரிவுடன் இணைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேல் மாகாண சுற்றுலாத்துறை  அமைச்சர் நிமல்லான்ஸா தனது அமைச்சினூடாகவும், நீர்கொழும்பு மேயர் அன்ரனிp ஜயவீர மாநகர சபையினூடாகவும் (  மாநகர சபை மொத்த செலவில் அரைவாசி)  சிசிரிவி கெமராக்களை பொருத்துவதற்கான நிதியினை வழங்குவதென அங்கு அறிவித்தனர்.
அத்துடன்,,தனியார் மற்றும் அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளபடி சுய பாதுகாப்பு  நடவடிக்கைகளை தமது நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டது.





புஷ்பா நகை கடை கொள்ளையர்கள் யார்?

நகர பாதுகாப்;பு தொடர்பாக ஏற்பாடு செய்ப்பட்ட கூட்டத்தில்  மேல்மாகாண அமைசசர் நிமலலான்ஸா உரையாற்றும் போது, புஷ்பா நகை கடை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில்  ஆகக் குறைந்தது ஒருவராவது நிச்சயமாக நீர்கொழும்பு நகரைச் சேர்ந்தவராக இருப்பார் என உறுதியாக குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ்  அத்தியட்சகர் ஜயந்த லியனகே அங்கு  ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், புஷ்பா நகை கடை கொள்ளைச் சம்பவத்தின் போது கடையிலிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்த காணொளியில் சிவப்பு நிற ரீ சேர்ட் அணிந்து வந்த நபர் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனவும், அந்த நபரினின் பெயர், ஊர் என்பன தெரியாதெனவும், அவர் தொடர்பான  மேலதிக தகவல்களைப் பெறறுக் கொள்வதற்கு  நீதிமன்றின் உதவியை நாடவுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் எனவும், சந்தேக நபர்களை கைது செய்ய  பொது மக்கள்  உதவி செய்ய வேண்டும்  எனவும் தெரிவித்தார்.
இந்த கொள்ளையில்; ஈடுபடுபவர்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் அதனை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் அந்த நிலயத்திற்கு வந்து கொடுக்கல் வாங்கல்கள்; எவ்வாறு இடம்பெறுகிறது?,  எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர்  என்பன போன்ற விடயங்களை அவதானித்தே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்  என நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ்  அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
 கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்ட விதமும், அவர்கள் தப்பிச் செல்லும் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட விதமும் கொள்ளையர்கள் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்தேகம் பொது மக்கள் மத்தியிலும் இருக்கிறது.



சகலரதும் பொறுப்பு

வர்த்தக நிலையங்கள் மற்றும்  நிதி நிறுவனங்கள் தமது சுய பாதுகாப்பு முறைகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும்.  மணி ஓசை எழுப்புவதோடு; புகை மூட்டத்தை  ஏற்படுத்தக் கூடிய நவீன  பாதுகாப்பு முறைகளையும், பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாடல் முறைகளையும்,  இது தவிர  வேறு முறைகளையும் கைகொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளால் அங்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கொள்ளைச் சம்பவம் ஏதும் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக  பொலிஸார் வரவேண்டும் என்பது வர்த்தகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது தொடர்பாக ஒத்திகை ஒன்றைப் பாரக்க வேண்டும் என்று வங்கி அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்தார். கொள்ளைச் சம்பவங்கள் சில நிமிடங்களில் இடம்பெற்று விடுவதாகவும், கொள்ளையர்கள் துரிதமாக தப்பிச் சென்றுவிடுவதாகவும் வங்கி அதிகாரியால் அங்கு குறிப்பிடப்பட்டது.

நீர்கொழும்பு நகரம்  கொள்ளையர்களின் கைவரிசையிலிருந்து பாதுகாக்கப்படுமா? அல்லது முக மூடிக் கொள்ளை ஒரு தொடர் கதையாகாலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்