பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, April 6, 2014

இருபது -20 உலக கிண்ணத் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் (படங்கள்)

பங்களாதேஷில் நேற்று (6-4-2014) நடைபெற்ற ஐந்தாவது இருபது  - 20 உலக கிண்ணத் தொடர் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை சாம்பியனானது.
 கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித் தலைவர் மாலிங்க களத்தடுப்பை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.


இலங்கை அணியில் பிரசன்னவுக்கு பதில், திசர பெரேரா வாய்ப்பு பெற்றார்.










 முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராத் கோளி, 58 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற்று, இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 26 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.











பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், மத்தீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.






 இலங்கை அணி சார்பில் குமார் சங்ககார 35 பந்துகளை எதிர்கொண்டு 1 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மோஹித் ஷர்மா, அஸ்வின், மிஸ்ரா, சுரேஸ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் குமார் சங்கக்காரவும் தொடர் நாயகனாக இந்திய அணியின் விராத் கோளியும் தெரிவாகினர்.







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்