பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, August 27, 2014

பொருளாதார சுமையில் வாழும் அரச ஊழியர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  17-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கமாறும் கோரி  கடந்த செவ்வாய்க்கிழமை (12-8-2014)  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக  உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்றை  நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், தாய்மார்கள் , பல்கலைக்கழக மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதி நாடகம் ஒன்றையும் நடத்தினர்.

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கமாறும் கோரி   ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் இதற்கு முன்னர் இபோன்ற பல ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தியுள்ளன.  இந்தக் கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளன. தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
அதேபோன்று, அரசாங்க மற்றும் தனியார்  தொழிற்துறையினரின் வேதனங்களை அதிகரிக்குமாறு வற்புறுத்தியும் ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களும்   அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
வரவு செலவு திட்டம் தயாரிக்கப்;படும் காலப் பகுதியிலும், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் காலப்பகுதியிலும் இது போன்ற ஆர்ப்பாட்டப் பேரணிகள் பல கடந்த காலங்களில் தொரடர்ந்து இடம்பெற்று வந்ததை காணக் கூடியதாக இருந்தது.
ஆயினும், வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக ஒரு சிறிய தொகை வாழ்க்கைச் செலவுப்படியாக வழங்கப்படுவதையே பல வருடங்களாக அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக ஒரு அரசாங்க ஊழியரின் சம்பளத்துடன் இணைத்து வாழ்க்கைச் செலவுப்படியாக வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகையே அதிகரித்தது.  ஒரு அரசாங்க ஊழியர் தற்போது ஓய்வு பெறுவாராயின் குறைந்த அளவு தொகையையே ஓய்வூதியமாகப் பெற வேண்டிய  துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறார்.  காரணம் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே அவருக்கான ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.
அத்துடன் அடிப்படைச் சம்பளத்தில் வாழ்க்கைச் செலவு  கொடுப்பனவு சேர்;க்கப்படாததன் காரணமாக அரசாங்க ஊழியர் ஒருவர்; பத்து மாத இடர்காலக் கடன் மற்றும் வேறு வகையான கடன்களைப் பெறும்போது குறைந்த தொகையையே பெறமுடிகிறது. இது போன்று பல பாதிப்புக்களுக்கு  ஒரு அரசாங்க ஊழியர் ஆளாகிறார்.
 தனியார் துறையினர்களின் வேதனம் சில தொழிற்துறைகளைப் பொருத்தவரையில்  அதிகரிக்து காணப்பப்பட்டாலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் குறைந்தளவு வேதனத்தையே பெற்று வருகின்றனர். குறிப்பாக கீழ் மற்றும் நடுத்தர மட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசாங்க  ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுப்படி வேதனத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்;காலத்தில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது.
 கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன உயர்வுப் போராட்டமானது, கோரிக்கைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும்நிறைவேற்றப்படாமல்  இறுதியில் தோல்வியில் முடிவடைந்ததையே அவதானிக்க முடிந்தது. அதேபோன்று,ஆசிரியர்;கள் மற்றும் அதிபர்களின் வேதனம் பல வருட காலமாக அதிகரிக்கப்படவில்லை எனவும், பல வருட காலமாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும், சம்பள முரண்பாடுகள் காணப்படுவதாகவும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன. அந்த தொழிற் சங்கங்களும் போராட்டங்களை மேற்கொள்வுள்ளதாக எச்சரித்துள்ளன.
இவ்வாறு அரசாங்க தொழிற்துறையில் உள்ள சகல தரப்பினரதும் வேதனம் தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுவதுடன், அவர்கள் பெரும் பொருளாதார கஸ்டத்துடனேயே வாழ்க்கையை நடத்துகின்றனர். அரசாங்க ஊழியர்களில் பெரும்பாலானவர்கள்  தமக்குரிய சகல விதமான கடன்களையும் பெற்று, பின்னர் எஞ்சிய மாத வேதனத்தில் கஸ்டத்துடன் வாழ்க்;கையை நடத்துகின்றனர் என்பது உண்மையாகும்.
இவ்வாறு அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த அரசாங்க ஊழியர்களாவர். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தொழிலுக்கு சென்றாலேயே குடும்ப வண்டியை ஓரளவு ஓட்ட முடியும் என்ற நிலையும் அரசாங்க ஊழியர்;களிடத்தில் காணப்படுகிறது.
. தமது தொழிலை அலட்சியத்துடன் செய்யும் மனப்பான்மை  அரசாங்க ஊழியர்;கள்; பலரிடத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார சுமைகளின் மத்தியில் கவலைகளுடன் காணப்படும் ஒருவர் தனது வேலையை சரியாக செய்வார் என்று எதிர்பார்ப்பது அறிவீனமாகும்.
 வெளிநாடுகள் பலவற்றில் அரசாங்க ஊழியர்களுக்கு நல்ல வேதனமும் பல்வேறு வரப்பிரசாதங்களும்  வழங்;கப்படுகின்றன. அதன் காரணமாக  ஊழியர்கள் சிறப்பான வகையில் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால் அரசாங்க ஊழியர்களை நாடி வரும் மக்கள் நன்மை திருப்தி அடைகின்றனர்.
எமது நாட்டில் கற்றவர்களுக்கான ஊதியம் போதாமை காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் சேவையை நாடு இழந்துள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவில் கூட அரசாங்க ஊழியர்களின் வேதனம் எமது நாட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும்.
இந்நிலையில், எமது நாட்டில நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் வாழ்க்கைச் செலவினத்தை அரச புள்ளி விபரத் திணைக்களம் கணிப்பிட்டிருப்பதாக   பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்து,  அதனை விபரித்துள்ளதை கடந்த வாரத்திற்கு முந்திய வாரம் நாம் எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி, பெருந்தோட்டத்துறையின் தொழிலாளர் குடும்பமொன்றின் மாதாந்த வாழ்;கைச் செலவினமாக 29 ஆயிரத்து 779 ரூபாவும்,  கிராமப்புற மக்களின் குடும்பமொன்றின் வாழ்;கைச் செலவினமாக 37 ஆயிரத்து 561 ரூபாவும், நகர் புற மக்களின் மாதமொன்றுக்கான வாழ்;கைச் செலவினமாக 59 ஆயிரத்து ஒரு ரூபாவும் காணப்படுவதாக  அமைச்சர் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியாயின், கிரமப் மற்றும் நகர் புறத்தில் வசிக்கக் கூடிய அரசாங்க ஊழியர் ஒருவருக்கு  இந்த  தொகை வேதனமாக வழங்கப்படுகிறதாஎன்பதை அரசாங்கம்தான் கூற வேண்டும். உண்மையில் இந்த வருமானம் அல்லது வேதனம் அரசாங்க ஊழியர்களில்  பெரும்பாலானவர்களுக்கு கிடையாது.
இலங்கையில் யாசகர்களின் நாளொன்றுக்கான வருமானம் சராசரியாக ஐயாயிரம் ரூபா எனவும், குறைந்த பட்ச வருமானம் 2500 ரூபாவிற்கு இற்கு மேல்  எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில யாசகர்கள் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை  சம்பாதிப்பதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது. சில பிச்சைக்காரர்கள் நல்ல வசதிகளுடன் வாழ்வது பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாசகர்கள் பலர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களது வருமானம் தொடர்பில் பல அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளின் காரணமாக  அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பொருளாதார பிரச்சினையில்; சிக்கித் தவித்து, மூன்று வேளை உணவையும்  போசாக்கான முறையில் உண்ண வசதியின்றி வாழும் போது,  பெரும்பாலான யாசகர்கள்; மூன்று வேளை உணவையும் போதியளவு உட்கொள்ளும் நிலை எமது நாட்டில் காணப்படுகிறது.
அப்படியாயின், எமது அரசாங்க ஊழியர்களின் பலரது நிலை யாசகர்களது நிலையைவிட மோசமானதாகும். உண்மையில் அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மாத்திரமல்ல பெரும்பாலான பொது மக்களின்  நிலையும் அவ்வாறுதான் காணப்படுகிறது.
அரசாங்க ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி கற்ற படித்த சமூகமாக காணப்படுவதால,; அவர்கள் கௌரவத்திற்குப் பயந்து பொருளாதார கஸ்டங்களை பொறுத்துக் கொண்டு   அவற்றை வெளியில் காட்டாமல் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கடந்த கால தேர்தல்களின் போது அரசாங்க ஊழியர்களின் பெரும் எண்ணிக்கையான வாக்குகள் அரசாங்கத்திற்கே கிடைத்தன. தபால் மூல வாக்குகளின முடிவுகள் அதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஆயினும், இந்நிலை தொடரும் என்று அரசாங்கம் கனவு காண முடியாது.

காரணம், கனவுகள் தொடர்வதில்லை. விழித்துக் கொள்ளும் போது கனவுகள் கலைந்து விடுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்