.jpg)
இலங்கை கம்பன் கழகத்தின்
ஸ்தாபக உறுப்பினரும் இலக்கிய
ஆர்வலருமான திரு. கந்தையா குமாரதாசன்
,ந்நிகழ்வுக்கு
தலைமைதாங்கினார்.
அண்ணாவியர் இளையபத்மநாதன் -
எழுத்தாளர்கள் திருமதி புவனா இராஜரட்ணம் - டொக்டர் நடேசன்
- திரு. ஜெயராம சர்மா
-சமூகப்பணியாளர்கள் திருவாளர்கள்
இராஜரட்ணம் சிவநாதன் - நவரத்தினம் இளங்கோ -
டொக்டர் சந்திரானந்த் -
ஜனாப் ரஃபீக் முருகபூபதியுடன் வீரகேசரி
நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய திரு. சுப்பிரமணியம் தில்லைநாதன் ஆகியோர்
மங்கல விளக்கேற்றினர். திருமதி மாலதி
முருகபூபதியின் வரவேற்புரையுடன்
நிகழ்ச்சி ஆரம்பமானது.
சொல்ல மறந்த கதைகளில்
,டம்பெற்ற படைப்புகளை திருவாளர்கள் இளங்கோ நவரத்தினம்
- ஆவூரான் சந்திரன்,
ஜெயராம சர்மா -
டொக்டர் நடேசன் ஆகியோர்
விமர்சித்தனர்.
கணக்காளர் திரு.
ஏ.வி. முருகையா - திருவாளர்கள் சிவநாதன் - தில்லைநாதன் -
ஜனாப் ரஃபீக் -
டொக்டர் சந்திரானந்த் -
மற்றும் மெல்பன் சங்கநாதம் வானொலி
இயக்குநர்களில் ஒருவரான திரு. விக்கிரமசிங்கம் ஆகியோர்
நூலின் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
முருகபூபதியின்
மகள் திருமதி பிரியாதேவி
முகுந்தன் பிரதிகளை வழங்கினார்.
இறுதியில் நூலாசிரியர் முருகபூபதி
ஏற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து
தேநீர் விருந்து இடம்பெற்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்