நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான
அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின்
விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் (62 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை (13) இயற்கை எய்தினார்.
நீர்கொழும்பில் வாழும் சகல இன, மத மக்களினதும்
பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி
விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார். அவர் அகில இலங்கை சமாதான நீதவானாக
சேவை புரிந்ததுடன் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வந்தார்.
மறைந்த தேரருக்கு சர்வ மதத்த தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் இறுதி
மரியாதை செலுத்தினர்.
கடந்த
வெள்ளிக்கிழமை (16) பகல் பெரும் எண்ணிக்கையான
முஸ்லிம்கள் திரண்டு வந்து கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரருக்கு இறுதி
மரியாதை செலுத்தினர். இது மறைந்த தேரர் முஸ்லிம் மக்களுடன் கொண்டுள்ள தொடர்பையும்
முஸ்லிம் மக்கள் அவர் மேல் கொண்டுள்ள மதிப்பையும்
மரியாதையையும் எடுத்துக் காட்டுவதாக அங்கு வருகைத் தந்த பொது மக்கள்
தெரிவித்தனர்.
செய்தி - M.Z.Shajahan





No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்