உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு
காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து
வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் சுமார் 325 அடி
உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார
மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் நத்தார்
மரத்தை பார்க்க வந்தவாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள
நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நத்தார்
மரம் 114 மீட்டர் உயரமானது என்றும் கடந்த 2009ம் ஆண்டு பிரேசிலில் அமைக்கப்பட்ட நத்தார்
மரமே உலகில் உயரமான நத்தார் மரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கின்னஸ் சாதனைப்படி அதன் உயரம் 128 மீட்டர் என்று
அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
Thanks -Pulse.lk
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்