பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே

Wednesday, August 7, 2013

ரமழானின் போதனைகளை நாளும் கடைப்­பி­டிப்போம்



('ரம­ழானின் போத­னை­களை நாளும் கடைப்­பி­டிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)



  

அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் இனிய வாழ்த்துக்கள்


Sunday, August 4, 2013

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை



உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Saturday, August 3, 2013

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2-8-2013) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரடைஸ் பெலஸ் உற்சவ மண்டபத்தில் இடம்பெற்றது.