பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, August 4, 2013

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை



உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!



எடுக்க எடுக்க
ஊற்றெடுக்கும் - அந்த
'ஸம்ஸம்' கிணறு!
கொடுக்கக் கொடுக்க
செல்வம் ஊற்றெடுக்கும் - இந்த
ஸகாத் கிணறு!

ஸகாத்!
ஒரு அட்சய பாத்திரம்.
செல்வத்தை தூய்மைப்படுத்தும்
ஆன்மீpகப் பத்திரம்!

இது ஏழை வரியல்ல!
செல்வந்த வரி!
நிலையில்லா செல்வத்தை
நிலைக்கச் செய்யும் வரி!
நாயனை
நினைக்கச் செய்யும் வரி1

இது சாதாரண வரி அல்ல!
வணக்க வரி!
இறைவனின்
இணக்க வரி!

அன்று
ஏந்தல் நபி
ஏவிய வரி!
கலீபாக்கள்
கட்டிக் காத்த வரி!
அல்குர்ஆன் கூறும்
கட்டாய வரி!

அன்று
'பைத்துல்மால்' நிதியில்
நிரம்பி வழிந்து
புதுமைகள் செய்;த வரி.
புண்ணியம் செய்த வரி.
ஸகாத்.
நதியல்ல.
நதிகள் வந்து சேரும்
கடல்!

ஸகாத்
பனித்துளி அல்ல.
பனித்துகல்கள்களின்
பனிமலை!

ஸகாத்
உதிரிப் பூ அல்ல.
ஆன்மீகப் பூக்களால்
அழகாய் தொடுக்கப்பட்ட
பூமாலை!

ஸகாத்
தனிமரமல்ல.
தோப்பு!

அன்று
ஏழைகளை தேடி
ஸகாத் போனது.
இன்று
ஸகாத்தைத் தேடி
ஏழைகள் போகிறார்கள்.

ஓ....முஸ்லிம்களே!
மூன்றாம் கடமையை
முழுதாய் நிறைவேற்றி
இறை திருப்தியை பெறுவீர்!

- கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்