பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, February 21, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை கட்சிகளும் - எம்.இஸட்.ஷாஜஹான்


(;தமிழ்த் தந்தி பத்திரிகையில் 16-2-2014 அன்று பிரசுரமானது)

எதிர்வரும் மார்ச்  மாதம் நடைறெவுள்ள மேல் மாகாண சபை தேர்தல்  சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை  குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன.
 இம்முறை அதிக எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள் 
களமிறங்கியுள்ளனர். சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம்> தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

 இதன் காரணமாக இம்முறை  மேல் மாகாண சபையில் சிறுபான்மையின  பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம் உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே> கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு மேல்மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதான கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகள் இம்முறை தனித்து போட்டியிடுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை தனித்து போட்டியிடுகிறது. அதேபோன்று> ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்> ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த தேர்லில் தனித்து போட்டியிடுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கொழும்பு மாவட்டத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதுடன்> கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

 இது தொடர்பாக ஐக்கிய தேசியக கட்சியின்  மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கொந்தராத்துகாரர்களாக  ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும்> ரிஸாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் மேல் மாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்குவதாக  அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து சமூகத்தை பின்னடைவிற்கு இட்டுச் செல்ல நினைப்பவர்களை விரட்டியடித்து மக்கள் அவர்களுக்கு சரியானதொரு  பாடத்தை கற்பிக்கவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்து பின்னர் அரசுடன் சேர்ந்து கொள்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறே> இம்முறையும் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று தேர்தலின் பின்னர் அரசாங்கத்தை பலப்படுத்த நினைக்கின்றனர்.

அதேபோன்று>  இவ்வளவு காலமும் தனித்து தேர்தலில் களமிறங்காத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் தனித்து களமிறங்கியுள்ளது. ரிஷாத் பதியுத்தீனின் சொந்த மாவட்டமான மன்னாரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற போதிலும் வடமாகாண சபை தேர்தலில்  அவர்கள் தனித்து களமிறங்கவில்லை. மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தவும்> அரசின் சதித்திட்டங்களுக்காகவுமே இந்தக் காட்டிக் கொடுப்பை இவர்கள் செய்கின்றனர் என்று முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முஸ்லிம்கள் காணி> கல்வி உரிமைகள் என பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும்> இவ்வாறான பிரச்சினைகள் அண்மைக்காலமாக இடம்பெற்ற போது அரசாங்கத்தின் முதுகுக்குப் பின்னால் பதுங்கிக் கொகொண்டிருந்த முஸ்லிம் கட்சிகள், தற்போது மக்கள் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு  வாக்குகளை சிதறடிக்கும் அரசாங்கத்தின்  சதித்திட்டத்திற்கு துணை போவதாகவும் அவர் மேலும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 இதேவேளை > இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  ரிஷாத் பதியுத்தீன்  கருத்து தெரிவித்துள்ளார். எமது கட்சிக்கு எவருமே சவால் அல்ல. மக்களின் ஆதரவுடனேயே நாம் களமிறங்கியுள்ளோம். நாங்கள் மேல் மாகாணத்தில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றுவோம். மூன்றாவது சக்தியாக உருவாகுவோம். தேர்தல் வேட்பு மனு தாக்கலின் பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
 சிறுபான்மை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும். சிறுபான்மை மக்கள் தமது இலட்சியங்களுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 அதேபோன்று, ஜனநாயக மக்கள் முன்னணயின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் தனித்து போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அரசாங்கம் களத்தில் இறக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில்  இணைந்து போட்டியிட்டது. கொழும்பில் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் ஐந்து தொகுதிகளிலும் இக் கூட்டணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை>  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  இந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்;டிக்கொண்ட போதிலும்> தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக கொழும்பு 15> ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் கட்சியின் ஆதரவாளர்கள்  மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸூக்குள்ள பலம் தன்னைப் பொறுத்தவரை> அரசாங்கத்தினுள்ளேயே இருந்துகொண்டு முதுகெலும்புடன் தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திராணியாகும்.  தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக் கொண்டாலும்> தனித்துப் போட்டியிடும் முடிவை தான் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாகவும்> அரசாங்கத்தை விட்டுவிட்டு வெளியில் இறங்கினால் ஓரிரு கிழமைகள் தன்னை தூக்கி தோளில் சுமந்துகொண்டு செல்வார்கள். ஆனால்> அப்படிச் செய்வதால் இன்றுள்ள நிலைமை தலைகீழாக மாறிவிடுமா? மறைந்த எமது தலைவர் கூறியதைப் போன்று சரியான முடிவை சரியான சந்தர்;ப்பத்தில் தான் எடுக்க வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கும் சரியான முடிவும் பிழையானதே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்டு விட்டு> அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்ததாக கூறினார்கள். அந்தத் தேர்தலில் நாங்கள் சேர்ந்து  போட்டியிட வேண்டுமென்று கட்சிக்குள் சதி நடந்தது. ஆனால்> அன்றிருந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவது தான் எங்களுக்கு இருந்த சாணக்கியமான அணுகுமுறையாக தென்பட்டது.

முஸ்லிம்களுக்கு ஒரு பலமான கட்சி இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இன்று எல்லா விடயங்களும் நடக்கின்றன. நாங்கள் தனித்து போட்டியிடும் நிலையில்> இப்பொழுது இன்னுமொரு அமைச்சரையும் எங்களைப் போன்றே தனித்துப் போட்டியிடுமாறு தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களைத் துரத்தித் திரிகின்றார் என்றும் அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை> ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா  விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தையே விமர்சிப்பதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச வாகனங்களில்> அரசாங்கம் வழங்கிய பாதுகாப்புடன் சென்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை குறை கூறிவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் கொழும்பில் இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும், தேர்தல் காலத்தில் புத்திசாதுர்யமிக்க முஸ்லிம் மக்களுடன் விளையாடுவதற்கு முற்பட வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு > ஒரு கட்சியை இன்னொரு கட்சி சாடுவதும் >ஒரு தலைவரை இன்னொரு தலைவர் சாடுவதும்  புதிய விடயமல்ல. தேர்தல் காலங்களில் இது சர்வ சாதாரணமாகும். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது. நிரந்தர எதிரிகளும் கிடையாது. தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் ஏசுவர். சவால் விடுவர். தேர்தல் மேடைகளுக்கு பின்னால் அவர்கள் உறவாடுவாடுவர். வாக்காளப் பொது மக்கள்தான் என்றும் பகையாளிகளாகுவர். ஆகவே> வாக்காளர்கள் நன்கு சிந்தித்து தமக்கு  சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
அரசியலில் சாணக்கியமான அணுகுமுறையை கடைப்பிபிடிப்பதற்காக> தமது தனித்துவத்தை காட்டுவதற்காக> பேரம் பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்காக> தமது கட்சிக்கு உள்ள பலத்தை வெளிப்படுத்துவதற்காக> அல்லது பரீட்சித்துப் பார்ப்பதற்காக சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக வைத்துக் கொள்வோம். அல்லது வேறு காரணங்கள் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். ஆனால்> தேர்தலின் பின்னர் தமக்கு வாக்களித்த மக்களின் முகத்தில் கரியை பூசுகின்ற வேலையே நடந்துள்ளன. இனியும் நடக்கப் போகின்றன. நடந்து முடிந்த தேர்தல்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

இந்நிலையில்> அரசுடன் இணைந்து அல்லது பிரதான கட்சிகளுடன் இணைந்து கொள்ளாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்   ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை பெற முயற்சி செய்கின்றன. பின்னர்; பங்காளிக் கட்சிகளான அக்கட்சிகள் அரசாங்கத்துடன இணைந்து கொள்ளும் என்பதே பொதுவாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் பகிரங்க உண்மையாக உள்ளது.

முஸ்லிம்களைப் பொருத்தவரையில்  அரசு சார்பான முஸ்லிம் தலைமைத்துவங்கள் மீது வெறுப்படைந்தவர்களாக உள்ளனர். பௌத்த பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற திட்டமிட்ட செயல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக> குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் கொதிப்படைந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலின் போது அதற்கு தகுந்த பாடம் கற்பி;ப்பர் என்றே அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்றுதமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆளும் தரப்புக்கு எதிராகவும்; > தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்
.;
இந்நிலையில்> பெரும்பாலான சிங்கள மக்களின்  வாக்குகள் தமக்கு சார்பாக இருக்கும் என அரசாங்கம் கருதுகிறது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுவிடக் கூடாது என்று கருதியே அரசாங்கம் தமது பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்> இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை தனித்து போட்டியிட அனுமதி அளித்துள்ளதாகவும்> அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஜனநாயக மக்கள் காங்கிரஸுடன்  இணைந்து போட்டியிட அனுமதியளித்துள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகிறது.

இரண்டு மாகாணங்களிலும்; ஆறு மாவட்டங்களிலும் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பல கட்சிகள் உள்ளன. ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி> மக்கள் ஐக்கிய முன்னணி> இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி> உள்ளிட்ட பல கட்;சிகள் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன் தேர்தலில் போட்டியிடுகின்றன.

மொத்தத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறிவைத்து வியூகங்கள் வகுக்கப்;பட்டு  கட்சிகள் களமிறங்கியுள்ளன. அல்லது களமிறங்க வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான  மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இந்த தேர்தலில்  தனித்து போட்டியிட்டு தனது கட்சியின் பலத்தை எடுத்துக்காட்ட முனைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சி இம்முறை கொழும்பிலும், முதன் முறையாக கம்பஹாவிலும் தனித்து போட்டியிடுகிறது. கம்பஹா மாவட்டத்தில் இக்கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படுவர் எனவும் கொழும்பு மாவட்டத்திலிருந்து நான்கு பேர் தெரிவு செய்யப்படுவர் எனவும்  கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் கார்திகேசு விக்னேஸ்வரம்  நம்பிக்கைத்; தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை கடந்த தேர்தலைப் போன்று  இம்முறையும் களமறக்கியுள்ளது. அந்த வேட்பாளர் 2009 ஆம் ஆண்டு நடந்த மேல் மாகாண சபை தேர்தலில் 21 ஆயிரத்து 857 விருப்பு வாக்குகளைப் பெற்ற  நீர்கொழும்பு பிரதிமேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ்  ஆவார்.
கம்பஹா மாவட்டத்தில்  தொடர்ச்சியாக இரண்டு தடைவைகள் ஒரு பிரதிநித்துவத்தை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமான ஷாபி ரஹீமை முதன்மை வேட்பாளராக நிறுத்தி இம்முறை தனித்து களமிறங்கியுள்ளது. இதன் காரணமாக இரு பிரபல முஸ்லிம் வேட்பாளர்களுக்குமிடையில் கம்பஹாவில் பெரும் போட்டி நிலவும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ஐக்கிய தேசியக் கட்சி > ஜனநாயகக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகளிலும்> சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம்> தமிழ் வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக  சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் முஸ்லிம் >தமிழ் வேட்பாளர்கள் மாகாண சபைக்கு  தெரிவு செய்யப்படும் வாய்ப்பும் குறைந்து போகும் அபாயம் உள்ளது.

 எனவே> மேல் மாகாண சபைக்கு தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்  கொள்வதும்> சுய நலமின்றி இனத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்யக்கூடிய செயலாற்றல்மிக்க உறுப்பினர்களை தெரிவு செய்வதும்> சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக் கூடிய பேரினவாதிகளின் அச்சுறுத்தல்களின் போது  அதற்காக துணிவுடன் குரல் கொடுக்கவும்> ஆக்கப்பூர்வமான நடவடிக்கை  எடுக்;கவும் கூடிய பிரதிநிதிகளை  மாகாண சபைக்கு  தெரிவு செய்து அனுப்புவதும் சிறுபான்மையினரின் கைகளிலேயே உள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்