பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, June 27, 2014

இலங்கை முஸ்லிம்களுக்கோர் கறுப்பு ஜுன் - தேச நேசன்

(இக்கட்டுரை 22-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
எமது தேசம் மீண்டும் ஒரு முறை  செந்நீரால்  குளித்துக் கொண்டது. தமிழ் மக்களுக்கு 'கறுப்பு ஜுலை' (1983) போன்று  முஸ்லிம் மக்களுக்கு 'கறுப்பு ஜுன' வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை  முதல் மூன்று தினங்களுக்கு மேலாக அளுத்கம, பேருவளை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான  இன வன்முறைகளினூடாக  எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும்  ஒரு தடைவை அபகீர்த்தியை தேடிக் கொண்டுள்ளது.

Thursday, June 26, 2014

ஒத்துழைப்பு வழங்குமா இல்லையா? சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் இலங்கை எடுக்கப்போகும் முடிவு என்ன? - தேச நேசன்

(இக்கட்டுரை 15-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

      இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவை நியமித்துள்ளமையைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரச தரப்பிலிருந்து வழமை போன்று எதிர்ப்பான கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற போதிலும் சர்வதேச நாடுகள் சிலவும் மற்றும் எதிர்கட்சிகளும்; சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறிவருகின்றன.

மூழ்கப் போகும் கப்பலில் இருந்து பாயத் தயாராகும் எலிகள்! - தேச நேசன்


(இக்கட்டுரை 8-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறாவிட்டால் 2015 ஆம் வருட ஆரம்பப் பகுதியிலாவது அந்த தேர்தல் இடம்பெறும்;.
ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று ஆருடம் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.

Wednesday, June 4, 2014

முஸ்லிம்களின் பெருக்கத்தால் அச்சப்படும் பேரினவாதம் - தேசநேசன்

(இக்கட்டுரை 1-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

முஸ்லிம் மக்கள் தொடர்பில் அதிக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட அமைப்பாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவது யாவரும் அறிந்த பகிரங்கமான உண்மையாகும்.
அந்த அமைப்பு காலத்திற்குக் காலம் முஸ்லிம் இனத்திற்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சண்டித்தனத்தையும் செய்து வருகிறது.
முஸ்லிமகளுக்கு  எதிராக பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வரும் அநீதிகள், அடாவடித்தனங்கள் யாவும் தி;ட்டமிடப்பட்ட

ஆளும் கூட்டணிக்குள் ஆதரவு குறைந்து வரும் அரசாங்கம் - தேசநேசன்

 
(இக்கட்டுரை 11-5-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

எமது நாட்டு அரசியல் நிலைவரம் அண்மைக்காலமாக ஆங்கிலத் திரைப்படம் போன்று ; விறுவிறுப்பாக  ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த வேளை எது நடைபெறுமோ? என்று மக்கள் ஊடகங்களின் ஊடாக செய்திகளை அறிவதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இரவு வேளையில், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கைகளை தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றை பார்ப்பது போன்று மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

Sunday, June 1, 2014

நீர்கொழும்பில் நடைபெற்ற 'மொழியுரிமை' தொடர்பான பிராந்திய கருத்தரங்கு

 'தமிழ்மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம்'' என்ற தொனிப் பொருளில்  மொழி உரிமை தொடர்பான பிராந்திய கருத்தரங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (1-6-2014) நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் பி..ப 3.00 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.
.மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், ஊடகச் செயலாளர் எஸ். விஜேந்திரன், நீர்கொழும்பு