(இக்கட்டுரை 8-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறாவிட்டால் 2015 ஆம் வருட ஆரம்பப் பகுதியிலாவது அந்த தேர்தல் இடம்பெறும்;.
ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்தியாவைப் போன்று
இலங்கையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று ஆருடம் கூறப்படுகிறது. இது தொடர்பாக
தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.
தற்போது, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த
அமைச்சர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்தை விமர்சிக்க
ஆரம்பித்துள்ளனர். அரச தரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மூழ்கும் கப்பலிலிருந்து எலிகள் வெளியில் பாய்ந்து தப்பிக்க முயல்வது போன்று, மெதுமெதுவாக மூழ்க ஆரம்பித்திருக்;கும்; ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எனும் கப்பலிலிருந்து சில அமைச்சர்களும்
உறுப்பினர்களும் பாய்வதற்கு தயாராகும் அறிகுறியே அரசாங்கத்தை விமர்சிக்கும்
செயலாகும் என்று எதிர்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் இடம்பெறவுள்ள பிரதான
தேர்தல் ஒன்றுக்கு கட்சிகள் தம்மை தயார்படுத்தி
வருவதை அவதானிக்க முடிகிறது. இதுதொடர்பாக கருத்துக்களை கட்சிகளின்
முக்கியஸ்த்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர்
ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும் நிலையில், பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான தேவை ஏற்பட்டு விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தினை
சரியாக பயன்படுத்தி மீண்டுமொரு முறை ஆட்சியினை அமைப்போம் என தெரிவித்துள்ள அவர், கூட்டுக் கட்சிகளின்
தேவை ஏற்படுமெனின் அனைத்து எதிரணிகளுடனும் பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்
குறிப்பிடுகையில், நாட்டில் மக்கள் தற்போது
ஆட்சி மாற்றமொன்றினை எதிர்பார்க்கின்றனர். பொருளாதார அரசியல் கலாசாரம் என அனைத்து
வழிகளிலும் மக்கள் அதிருப்திகளை கண்டுவிட்டனர். பாதுகாப்பு அற்ற ஓர் வாழ்க்கைக்கு
மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியமும்
அவசரமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தல்
இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். என்பதில்
எவ்வித மாற்றமும் இல்லை. எனினும் ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமாயின்
எம்மை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள முடியும். மக்கள் தற்போது ஐக்கிய தேசியக்
கட்சியின் ஆதரவினை நாடி நிற்கின்றனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை
திருப்திப்படுத்தவில்லை. எனவே இவ்வாறானதொரு நிலையில் நாம் தனித்து போட்டியிடுவதே
சிறந்ததாகும். எனினும் ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவின் அவசியம் ஏற்படும்
சந்தர்ப்பத்தில் மீண்டும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேசி முடிவு களை எடுப்போம்
என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றே
தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை
ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா நீண்ட
காலமாகவே வலியுறுத்தி வருகிறார். பொது வேட்பாளராக பல பேர்களின் பெயர்கள்
அடிபடுகின்றன. ஆயினும், இதுவரை ஒருவரும் தெரிவு
செய்யப்படவில்லை. தேர்தல் தொடர்பாக உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே
பொது வேட்பாளர் வெளியில் வருவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில,; மூன்;றாவது தடைவையாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர் கட்சித் தலைவர்; ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்று தெரிகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு
எதிரணி கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். அவரை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்பது மங்கள சமரவீர உள்ளிட்ட ரணில் ஆதரவாளர்களின் விருப்பமாகவும்
எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தோடு ஒட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உருமய ஆகிய கட்சிகளின் தலைமைகள் அரசாங்கத்திற்கு எதிராக
எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன: அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து
வருகின்றன.
அரசின் பேரினவாத மேலாத்திக்கப் போக்கையும்,
சிறு கட்சிகளை கூட
வைத்துக் கொண்டு குழி பறிக்கின்ற அரசியலையும் விஞ்சி ஓர் அரசியலை செய்வதற்கான
தளத்தினை அமைக்க வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த
கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான
ரஹுப் ஹக்கீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
அட்டாளச்சேனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது
தெரிவித்துள்ளார்.
இதைச் செய்வதற்கான வியூகத்தை இன்னும் மூன்று மாதங்களுக்குள் நாம் அடையாளம் காண
வேண்டியுள்ளதாகவும், சிலவேளை ஒரு மாதத்துக்குள்
கூட அந்த வியூகத்தை அடையாளப்படுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ள
அமைச்சர், தென் மற்றம் மேல்மாகாண சபை தேர்தல்களுக்குப் பின்னர் இந்த
அரசின் ஆதரவுத் தளத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியால் ஆட்சியாளர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளதாகவும் இந்த நாட்டின் அடுத்த கட்ட அரசியலைத் தீர்மானிக்கும்
முக்கியமானதொரு சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம்
அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையில்
சுதந்திரக் கட்சிக்குள் எதிரணி ஒன்றும் உருவாகியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று, அதிருப்தியாளர் குழுவில் 12 அமைச்சர்கள்
இணைந்திருப்பதாகவும், ராஜபக்ஷ குடும்பத்தின் போக்கில் அதிருப்தி கண்டுள்ள இவர்கள்
பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா? இல்லை சுதந்திர கட்சி
சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்
வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இணயத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம், கிறிஸ்;தவ மக்களின் வெறுப்பை ஆளும்
தரப்பு சம்பாதித்துக் கொண்டுள்ளமை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்,
ஆளும் கூட்டணிக்குள்
குழப்பம். அதிகரித்துள்ள ஊழல். வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கத்தின் செல்வாக்கு,
மேல் மற்றும்
தென்மாகாண சபை தேர்தலின் பின்னர் எதிர்கட்சிகளின் வாக்குகள் அதிகரித்துள்ளமை.
இந்திய தேர்தல் முடிவுகளின் தாக்கம் எமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கின்றமை, வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் போன்றவை மத்தியிலேயே
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ இனி நடத்த வேண்டியுள்ளது.
அதேபோன்று, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்
கொள்ளும் வகையில் எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டியுள்ளது. எதிர்கட்சிகள்; பொது அணியில் ஒன்று திரண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை
நிறுத்தினால்; வெற்றியைப் பெறலாம் என்பது
அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது எந்த அளவு சாத்தியப்படும்
என்பது இனி வரும் காலங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
ஆளும் கப்பலிலிருந்து எலிகள் பல
வெளியில் பாய தயாராகிக் கொண்டிருப்பது புரிகிறது. அந்த எலிகள் வெளியில் பாய்ந்து
நீந்திச் சென்று அடுத்த ஆளும் தரப்பு கப்பலில் ஏறிக் கொள்ளலாம். அல்லது இறந்தும்
போகலாம்.
ஆளும் தரப்பு கப்பல் மூழ்கினால் அதற்கு அரச தரப்பு முக்கியஸ்த்தர்களே
பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை
யாரும் மறுக்க முடியாது அல்லவா?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்