பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, June 1, 2014

நீர்கொழும்பில் நடைபெற்ற 'மொழியுரிமை' தொடர்பான பிராந்திய கருத்தரங்கு

 'தமிழ்மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம்'' என்ற தொனிப் பொருளில்  மொழி உரிமை தொடர்பான பிராந்திய கருத்தரங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (1-6-2014) நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் பி..ப 3.00 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.
.மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், ஊடகச் செயலாளர் எஸ். விஜேந்திரன், நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் என். கணேசலிங்கம்தற்போதைய அதிபர் திருமதி புஸ்பராணி, பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச தமிழ் ஆர்வலர்கள், அரச மற்றும்  தனியார் ஊழியர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் பங்குபற்றினர்.












நிகழ்வின் ஆரம்பத்தில்  சர்வ மத்த தலைவர்களின் ஆசி உரைகளும் வாழ்த்துரைகளும்; இடம்பெற்றன. குகேஸ்வரக் குருக்கள் ஆசி உரை வழங்கினார்.  மௌலவி இஸட். ஏ.எம்.பாரிஸ், அருட் சகோதரர் ஜெராட் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் 'பொது நிர்வாகத்தில் தமிழ் மொழி அமுலாக்கல்' என்ற தலைப்பில் மோ. நெல்சன்,  'கல்வித் துறையில்  தமிழ் மொழி அமுலாக்கல்' என்ற தலைப்பில் சி.சரவணபவானந்தன், 'நீதித்துறையில் தமிழ் மொழி அமுலாக்கல்' என்ற தலைப்பில் சட்டத்தரணி இ. தம்பையா ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் சட்டத்தரணி இ.தம்பையாவின் வழி நடத்தலுடன் சபையோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்