நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான்
(வத்தளை - மாபொல
முன்னாள் நகர சபை உறுப்பினரும்> ஜனநாயக மக்கள்
முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரதான செயலாளரும்>
மேல்மாகாண
சபை தேர்தலில் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமான கார்த்திகேசு விக்னேஸ்வரம் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட
செவ்வி. 9-2-2014 அன்று பிரசுரமானது)
கேள்வி : நீங்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சென்றீர்கள்?
பதில்: ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மணோ கணேசன்தான் இதற்கு காரணம். அவரது
அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்டே அவரது கட்சியில் இணைந்து கொண்டேன். தமிழ்
மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர் மணோ கணேசன்.
அவர் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாதவர். சகல இன மக்களுக்கும் உதவி
புரிபவர். மக்களின் குரலாக ஒலிப்பவர்.
துணிந்து செயற்படுபவர். இவை என்னை கவர்ந்தன. அதன் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்தேன்.
கேள்வி : நீங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு என்ன
வித்தியாசத்தை காண்கிறீர்கள்?
பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் மிகப் பெரும் கட்சியாகும். அக்கட்சி சகல
இனத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சியாகும். அது சகல இனத்தவர்களதும்
கட்சியாகும். ஆயினும்> காலப் போக்கில்