'(தமிழ்த் தந்தி' பத்திரிகையில்
2-2-2014 அன்று
பிரசுரமானது)
இலங்கையை
முஸ்லிம் காலணித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப்
போவதில்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசிறி தேரர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
வை.எம்.எம்.ஏ.அமைப்பு,
உலமா சபை, முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள
இருப்பதாகவும், கிழக்கில் சூ10ட்சுமமான முறையில் முஸ்லிம் அடிப்படைவாத
சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச்
சக்திகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களின்
உடைகள், உரிமைகள்
தொடர்பாக என்ன செய்தீர்கள்? முதலில் அதற்கு
தீர்வு காணுங்கள் எனக் கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அது எமக்குத்
தெரியும் எனவும், ஆனால், ஜிகாப், ஹிஜாப் முகத்தை மூடிய உடைகள் அணிவது நாட்டின்
தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எனவும் பொதுபலசேனாவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமது இனத்தை
பற்றி மற்றவர்கள் கருத்துக் கூற அதிகாரம் கிடையாது எனத் தெரிவிக்கும் பொதுபலசேனா
முஸ்லிம்களின் சமய, கலாசார விடயங்களை
விமர்சிப்பதிலும், தடைகள் போட
முனைவதிலும், அச்சுறுத்தல்
விடுப்பதிலும் மும்முரமாக செயற்பட்டுவருகிறது. இதிலிருந்து சில விடயங்கள்
தெளிவாகத் தெரிகின்றன. பெரும்பான்மையினத்தவர்கள் சொல்கின்றபடிதான் இனி
சிறுபான்மை இன மக்கள் தமது சமய சட்ட
திட்டங்களையும் , கலாசார
விடயங்களையும் கடைபிடிக்கவும் பின்பற்றவும் வேண்டும், தாங்கள் சொல்கின்றபடி தான் இனி முஸ்லிம்கள் வாழ
வேண்டும். அதேபோன்று பெரும்பான்மையினத்தவர்களின் அடிமைகளாகத்தான் சிறுபான்மை
இன மக்கள் வாழ வேண்டும் என்பன போன்ற விடயங்களே அடிக்கடி அவர்கள் விடுக்கும்
கருத்துக்கள் அச்சுறுத்தல்கள் வற்புறுத்தல்களில் இருந்து எமக்கு விளங்குகிறது.
யுத்த வெற்றியின்
பின்னரே பேரினவாதிகளின் கை என்றுமில்லாதவாறு ஓங்கியுள்ளது. பேரினவாத அமைப்புக்கள்
இவ்வாறு சண்டித்தனமாக கருத்து கூறுவதற்கும் நடந்து கொள்வதற்கும் பின்னணியில்
அரசாங்கத்தின் முக்கிய மறை கரங்கள் சில ஒத்துழைப்பதாகவே, அல்லது அவர்களின் நிகழ்ச்சி நிரலின்
அடிப்படையிலேயே இந்த அமைப்புக்கள் செயற்படுவதாகவே பொதுவாக சந்தேகம் தெரிவிக்;கப்படுகிறது.
இல்லையேல், ஜனநாயக
நாடொன்றில் தமது கருத்துக்களைத் தெரிவிக்க சகலருக்கும் சுதந்திரம் இருக்கிறது
என்பதற்காக, இன்னொரு இனத்தின்
மத, சமய, கலாசார உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்க
முனைவதற்கு இந்த பேரினவாத இயக்கங்களுக்கும் இனவாதம் பேசும் கட்சிகளுக்கும்
அதிகாரத்தையும், சுதந்திரத்தையும்
, பாதுகாப்பையும்
ஆசிர்வாதத்தையும் வழங்குவது யார்? யுத்தம் நிலவிய காலகட்டத்தில் இல்லாத ஆபத்து
இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவினாலும்; ஹிஜாபினாலும்; திடீரென முளைத்தது எவ்வாறு? முஸ்லிம்கள் புலிகளோடு இணைந்து தனி நாடு
கேட்டார்களா? அல்லது
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டார்களா? வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் துரத்தி
அடிக்கப்பட்டதே வரலாராகும். இன்று வரை பலர் பல பிரதேசங்களிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்? முஸ்லிம் நாட்டுப்பற்றுடனே கால காலமாக
இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
வரலாறு அதனை உறுதிப்படுத்துகிறது.
முஸ்லிம்கள்
உட்பட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வகையான அழுத்தங்கள் சமய ரீதியில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும்
பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் அரசியல் இலாபத்தின் அடிப்படையிலேயே இது போன்ற அழுத்தங்கள்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக
முஸ்லிம் மக்களுக்கு எதிராக விடுக்கப்படுவதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
எதிர்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியை பலயீனப்படுத்தியுள்ள இந்த
அரசாங்கம் உண்மையில் பல்வேறு
கட்சிகளின் கூட்டு அரசாங்கமாகவே உள்ளது. பல வருட காலமாக யுத்தத்தை காட்டி மக்களை
ஏமாற்றி வந்த இந்த அரசு, இப்போது அதனை
செய்ய முடியாத நிலையில் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ள அல்லது தக்க
வைத்துக்கொள்ள, தொடர்ந்தும்
அதிகாரத்தில் இருக்க பல்வேறு திட்டங்களை
வகுத்து செயற்பட்டு வருகிறது. அல்லது செயற்பட வேண்டியுள்ளது.
நாட்டில் மக்கள் பொருளாதார புயலில் சிக்கி தவித்துக்
கொண்டிருக்கிறார்கள். மக்களின் கொள்வனவு ஆற்றல் குறைந்துள்ளது. வாழ்க்கைச் செலவு
அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக
எதிர்ப்பலைகள் மக்கள் மத்தியில்
தோன்றியுள்ளன. பல்வேறு சம்பவங்கள் அதனை நிரூபிக்கின்றன. இனி எப்படி யுத்த வெற்றியை
விற்பனை செய்வது? இந்நிலையில் பெரும்பான்மை மக்களின் ஆதரவையும்
வாக்குகளையும் பெறுவதற்கான சிறந்த வழி இனவாதத்தை பரப்புவதுதான்.
நாங்கள் தமிழ்
மக்களை அடக்கிவிட்;டோம் அல்லது
வெற்றி கொண்டு விட்டோம். இனி முஸ்லிம் மக்களையும் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களையும்
மதத்தின் பேரிலும் சமயத்தின் பேரிலும்; அடக்கிவிட்டாக பௌத்த மக்கள் மத்தி;யில் எடுத்துக்காட்டி அதிகாரத்தை தக்க
வைத்துக்கொள்ளவது சிறந்ததும் இலகுவானதுமான வழியாகும் என்று அதிகாரத்தில் உள்ள சில
இரும்புக்கரங்கள் கருதுகின்றன. அந்த திட்டங்களை செயற்படுத்தும் வழிமுறைகளில்
ஒன்றாகவே இந்த பொதுபலசேனா உட்பட பேரினவாத, அடிப்படைவாத அமைப்புக்ளையும் கட்சிகளையும் கருத வேண்டியுள்ளது.
இந்நிலையில்.
கையாளாகாதவர்களாக அல்லது சுயநலன் சார்ந்து செயற்படுபவர்களாக முஸ்லிம்
தலைமைத்துவங்கள் இருப்பதுதான் கவலைக்குரியதாகவுள்ளது. எமது மக்களின் உரிமைகளைப்
பற்றி பேசுவதற்கும், அதற்காக ஆணித்தரமாக போராடுவதற்தும்
திராணியற்றவர்களாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் உள்ளன. ஆனால,; அழகான முறையில் அறிக்கைவிடுவதிலும் தமது பக்க
நியாயங்களை எடுத்துக் கூறுவதிலும் அவர்களை
யாராலும் விஞ்ச முடியாது.
இந்நிலையில்,
பெரும்பான்மையின அமைச்சர்கள் சிலரரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
சிலரும், தமிழ்
அரசியல்வாதிகள் சிலரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்காக குரல்
கொடுத்துள்ளனர். அல்லது கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கூட எமது ஒரு சில முஸ்லிம் அரசியல்
தலைமைத்துவங்கள் விரும்பவில்லை என்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல.
29 இற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட பிறகும்,
'ஹலால்' பிரச்சினை, ஹிஜாப் பிரச்சினை என்று பல்வேறு அழுத்தங்கள்
முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும்
நிலையிலும், முஸ்லிம்களுக்கு
சொந்தமான வர்தத்க நிலையங்கள் சில தாக்கப்பட்ட நிலையிலும் முஸ்லிம்களுக்கு எமது நாட்டில் எந்தவிதப்
பிரச்சினையும் கிடையாது. அது ஒரு சிறு குழுவினரின் வேலை என்று அறிக்கைவிடுகின்ற,
குரல் கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் இருக்கும்
வரை, சுயநல அரசியலை மேற்கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
இருக்தும் வரை, முஸ்லிம்கள்
பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருக்கும் வரை, ஒற்றுமையின்றி இருக்கும் வரை
பொதுபலசோனா போன்ற அமைப்புக்களினதும் பேரினவாத கட்சிகளினதும் கை எப்போதும் ஓங்கியே
இருக்கும் என்பது மட்டு;ம் திண்ணம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்