பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, February 13, 2014

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும் - முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் ஷாபி ரஹீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் தமிழ் தந்திக்கு வழங்கிய விசேட செவ்வி. 19-1-2014 அன்று பிரசுரமானது

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

உங்களது அரசியல் பிரவேசம்  மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?

நான் வர்த்தகத்துறையில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த காலப் பகுதியில்  2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  போட்டியிடுமாறு புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை

அந்த தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 3001 விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். பத்து வருட இடைவெளியின் பின்னரே எனது வெற்றியின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் மேல் மாகாண சபைக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்தது.  அந்த தேர்தலில் மேல் மாகாண சபைக்கு எமது கட்சியின் சார்பில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.














மாகாண சபை உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்ட பின்னர் நான் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் காரணமாக மீரிகமை> பியகம,; நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்ட சிறுபான்மையின மக்கள் நன்மையடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல்மாகாண சபை தேர்தலில் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு ன் 12 ஆயிரத்து 344 விருப்பு வாக்குள் பெற்று வெற்றி பெற்றேன். 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு மேல் மகாண சபையில் 16 ஆயிரத்து 621 வாக்குகள் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு 18 ஆயிரத்து 14 வாக்குள் கிடைத்தன. எனது விருப்பு வாக்குள் 9343 வாக்குகளால் அதிகரித்தன.

அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில்எமது கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் நான் போட்டியிட்டேன். அந்த தேர்தலில்  23 ஆயிரத்து 122 விருப்பு வாக்குகளைப்; பெற்றேன். இவ்வாறு எமது கட்சிக்கு கம்பஹா மாவட்டத்தில் வாக்கு வங்கி அதிகரித்ததோடு எனது விருப்பு வாங்குகளும் பல மடங்காக அதிகரித்தது.  இது எமது கட்ச்யின் மீதும் எனது சேலையின் மீதும் கம்பஹா மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மீண்டும் தலைமை வேட்பாளராக களமிறங்க இருக்கிறீர்கள். தனித்து போட்டியிடவுள்ள உங்களது கட்சி இந்த முறை கம்பஹா மாவட்டத்தில் தனது பிரிதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளுமா?
நி;ச்சயமாக. நடைபெறவுள்ள தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் எனது வெற்றி நிச்சயம்.அது மட்டு;மல்ல இம்முறை கம்பஹா மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை நாஙகள் பெறுவோம். 2004 ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக இருந்து தமிழ் பேசும் மக்களுக்காக நான் செய்த சேலையை யாவரும் அறிவர். நூன் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் எனது விருப்பு வாக்குகள் அதிகரித்துள்ளமை அதனை எடுத்துக் காட்டுகிறது.

இந்த தேர்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு. எமது கட்சி;யின் வெற்றிக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எமது கட்சிப் போராளிகள் எம்முடன் எப்போதும் போலவே உறுதுணையாக இருக்கிறார்கள்.
நான் தினமும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து எனது சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களின் தேவைகளை தீர்த்து வருபவன். நான் மக்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவளிப்பது புரிகிறது. அவர்களின் ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் எமது கட்சியின் வெற்றியை கட்டியம் கூறுகிறது.

அப்படியானால் கம்பஹா மாவட்டத்தில்  உங்கள் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதித்துவம் எந்த தொகுதியைச் சேர்ந்தவராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள்?

புது வேட்பாளர்கள்  பலர் இந்த தேர்தலில் களமறிங்கவுள்ளனர். சகல இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்களையும் எமது கட்சியில் போட்டியிட வைக்கவுள்ளோம்.சிறப்பாக செயற்படக் கூடிய மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளும் வேட்பாளர்கள்,; அதிக விருப்பு வாக்களை பெறுவர். இந்த தொகுதியை சேர்ந்வர்தான்வெற்றி பெறுவார் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் கம்பஹாவில் இரண்டு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும் என்பது நிச்சயமாகும்.

இரண்டு தடைவை மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து நீங்கள் சாதித்தது என்ன?
நான் மக்களுக்கு செய்த சேவைகளை சாதனையாக கருதவில்லை. எனது கடமை மற்றும் பொறுப்பாக கருதுகிறேன். இந்த ஒன்பது வருட காலப் பகுதியில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் தமிழ் மக்கள் எனது பிரதநிதித்துவம் மூலமாக பல நன்மைகளையும்> சேவைகளையும் பெற்றறுள்ளனர். அது ஒரு நீணட் பட்டியலாகும். குறிப்பாக கூறுவதாயின், நீர்கொழும்பில் விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மற்றும் அல்-ஹி;லால் மத்தியக் கல்லூரி ஆகியவற்றுக்கு முச்சக்கர வண்களை பெற்றுக் கொடுத்துள்ளமை> பாடசாலைகள் பலவற்றுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை> பாடசாலைகள் சிலவற்றுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளமை> விளையாட்டு உபகரணங்களைவ வழங்கியுள்ளமை> ஆளணி நியமனங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை, வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் வழங்கியுள்ளமை> அஹதியா பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கியுள்ளமை> அஹதியா ஆசிரியர்களுக்கும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் கருத்தரங்குகள்  நடத்தியுள்ளமை என்பன கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு செய்துள்ள சேவைகள் சிலவாகும்.
அதேபோன்று>மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்றங்களின் கீழ் உள்ள வீதிகள் பலவற்றை புனரமைப்பு செய்து கொடுத்துள்ளமை> வீதி மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டங்கள்,; குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவிகள் வழங்கியுள்ளமை. மலசல கூடங்களை அமைப்பதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளமை. இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான  பயிற்சிகள் வழங்கியுள்ளமை,; மற்றும் சுய தொழிலுக்கான உபகரணங்களை வழங்கியுள்ளமை என பல வேலைத்திட்டங்கள் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பயனாளிகளும் எமது கட்சியின் ஆதரவாளர்களும் நன்கு அறிவர்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்களின் இஸ்லாமிய சட்டங்கள் மீதும் கலாசாரங்கள் மீதும் பொது பலசோனா உட்பட  பேரினவாதிகள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள், உரிமை மீறல்கள்> அடக்கு முறைகள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான வகையில் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
மேல்மாகாண சபையில் நானும் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள  எமது கட்சி உறுப்பினர் ஹர்சாத் நிசாம்தீனும்  இது தொடர்பில் குரல்கொடுத்துள்ளோம். எமது கட்சியின் அதியுயர் பீடத்திலும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக எமது கருத்துக்களை தெரிவித்துள்ளளோம். இவ்விடயம் தொடர்பில் எமது கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தே வருகிறது. அரசியலமைப்பில் சகல இன மக்களுக்கும் சம உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது  உரிமையை இன்னொரு சமூகத்தில் உள்ள சிறிய குழுவொன்று பறித்தெடுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு  நாங்கள் அவர்களின் பாணியில் நடவடிக்கை எடுத்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும். உதாரணமாக எமது கட்சித் தலைவர் ஆவேசமாக குரல் கொடுத்தால் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையாக வாழும் பெரும் பான்மையின சமூகம் பாதிக்கப்படும்.அதன் எதிர் விளைவு முழு நாட்டிலும் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம் மக்கள் பாரிய இழப்புக்களை சந்திக்;க நேரிடும். இன்னொரு இன வன்முறை ஏற்படும். நாங்கள் சாணக்கியத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. எமது தலைவர் பொறுப்புடனும் அரசியல் சாணக்கியத்துடனும் நடந்து கொள்கிறார். ஏனைய  அரசியல்வாதிகள் போன்று எமது தேசியத் தலைவர் பேச முடியாது. கொழும்பு மாவட்டத்திலிருந்து கொண்டு அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கலாம். முஸ்லிம் காங்கிரஸின்  தேசியத் தலைவர் அவ்வாறு  கதைக்க முடியாது. அவர் தேசிய கட்சியின் தலைவராவார்.

மேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமா?
எமது கட்சி துணிவுடன் தனித்து போட்டியிடவுள்ளது. அது தனது சொந்தக் காலிலேயே தேர்தலில் நிற்கிறது. தேர்தலின் பின்னர் எமது தலைவரும் எமது கட்சியின் அதியுயர்பீடமும் எடுக்கும் தீர்மானத்திற்கிணங்க  அது தொடர்பில் அறிவிக்கப்படும். எமது கட்சி தனித்து போட்டியிடுவது கட்சியின் பலமாகவும் எமது சமூகத்தின் பலமாகவும் அமையும்.

பொது பலசேனா உட்பட சிங்கள பேரினவாத அமைப்புக்களும் கட்சிகள் சிலவும்  முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்;லிம்  அமைச்சர்கள் மீது முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கடும்  விசனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

முஸ்லிம்களுக்கு சேவை செய்யவும் முஸ்லிம்;;களின் உரிமைகளை நிலை நாட்டவும்  முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அது தொடர்பில்  குரல் கொடுக்கவும்  எமது கட்சி கடமைப்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக ஆவேசமாக பேசுபவர்கள், பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுபவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வன்;முறைகளை நாடுவதாகவே நான் கருதுகிறேன். அதனூடாக அவர்கள் அரசியல் இலாபம் தேடவே முயற்சி செய்கிறார்கள் பிரச்சினைகளை தீர்ப்பது அவர்களின் உண்மையான நோக்கமாக இருக்க முடியாது.
 முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை இல்லாததன் காரணமாகவே அங்கு குழப்பங்களும் இரத்தக் கறைகளும் தினம் தினம் அரங்கேறிவருகின்றன .இந்நிலையில் எமது நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாங்கள் பெரும்பான்மையின மக்களுடன் புரிந்துணர்வுடனும் சகிப்புத் தன்மையுடனும் வாழ வேண்டும் . எங்களிடையே உள்ள ஒற்றுமையே எதிரிகளை தோல்வியடையச் செய்யும் என்பது நிச்சயமாகும். அதனால்தான் நபிகள் நாயகம் ஒற்றமை எனும்  கயிற்றை பற்றிப் பிடிக்குமாறு கூறியிருக்கிறார்கள்.

 பொது பலசேனா போன்ற இனவாதிகள் சிறு குழுவினரே ஆவர்;. இந்த குழுவினர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். ஆயினும்  நாங்கள் அந்த குழுவினர் போன்று எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது. எமது சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூகத்தின் பலத்தை நிலை நாட்;ட வாக்கு பலத்தை பயன்படுத்த வேண்டும். சமூகத்தின் மீது அழுத்தம் மேற்கொள்ளபடும் போது அதனை முறியடிக்க வேண்டியது எல்லோருடையதும் கடமையும் பொறுப்புமாகும்.

முஸ்லிம்களின் மீது எதிரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது கட்சி பேதம் மற்றும் வேறு பேதங்களை காட்டி பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டியது கட்டாயமாகும்.  தனித்து எமது கட்சியை மட்டும் சாடுவது தவறாகும். முஸ்லிம்களை அரசியல் ரீதியில் பலயீனப்படுத்தும் வேலைத்திட்டம் என்றோ ஆரம்பித்து விட்டது. கொழும்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்து இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

உங்கள் கட்சி மேல் மாகாணத்தில் மொத்தமாக எத்தனை ஆசனங்களை பெறும் என கருதுகிறீர்கள்?

கம்பஹா> கொழும்பு> களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு ஆசனங்கள் வீதம் மொத்தமாக ஆறு ஆசனங்களை நாங்கள் பெறுவோம். இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் பேரம் பேசும் சக்தியாக எமது கட்சி இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

நேர்காணல் : எம்.இஸட்.ஷாஜஹான்

நன்றி: 'தமிழ்த் தந்தி' பத்திரிகை  (19-1-2014)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்