('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில்
நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகள் உட்பட தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும்
சுயேட்சைக் குழுக்களும்; தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவது
போல் பிரதான கட்சிகள் இரண்டும் இந்த தேர்தலுக்கு
தயாராவது போன்று தெரிகிறது.
இந்நிலையில்,
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியும்> ஐக்கிய தேசியக் கட்சியும்
சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிக நடிகைகளையும்> பாடகர்களையும் இந்தத் தேர்தலில் களமிறக்கவுள்ளது.
அன்று கதையை நம்பி; படமெடுத்தார்கள். இன்று சதையை
நம்பி படமெடுக்கிறார்கள் என்று> இந்திய சினிமாவைப் பற்றி
குறிப்பிடுவது போன்று, எமது நாட்டு அரசியலிலும்
நாடாளுவதற்கு நடிகைகளை பிரதான கட்சிகள் களமிறக்குகின்றன. அரசியலில் ஈடுபட
குறிப்பிடத்தக்க எந்தத் தகைமையும் அவசியமில்லை என்பதை எமது நாட்டில் உள்ளுராட்சி
சபைகளுக்கான தேர்தல் , மாகாண சபை தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றி
பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் நிரூபித்துள்ளனர்.
பண பலம், சண்டித்தனம்> இந்த இரண்டு தகைமைகளும் கொண்ட
வேட்பாளர்கள் தேர்தலில்; வெற்றிபெறுவது அவ்வளவு கஸ்டமான விடயம் அல்ல. இந்திய சினிமாவிலும்
தொலைக் காட்சித் தொடர்களிலும் மூழ்கிப் போயுள்ள எமது நாட்டு மக்கள் இந்தியாவைப்
போன்று பொது மக்கள் எமது நாட்டு நடிக> நடிகைகளுக்கும் பிரபலங்களுக்கும் தமது வாக்குகளை அள்ளி வழங்குவார்கள் என்பதை
பிரதான கட்சிகள் நன்கு அறிந்து வைத்துள்ளன.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமது பிரதேசங்களுக்கு விஜயம் செய்யாத பிரதிநிதிகளை
தேர்தல் மேடைகளிலாவது கண்கள் குளிர கண்டு களிக்கும் வாய்ப்பாவது மக்களுக்கு
கிடைக்கட்டும் என்று கட்சிகள் நடிகைகளை தேர்தல்
மேடைகளில் நடிக்க வைக்கின்றனவா? அந்த ஒரு சந்தோசமாவது
மக்களுக்கு கிடைக்கட்டுமே? ஏன்று கட்சிகள் கருதுகின்றனவா?
ஆயினும்> எந்தவித அரசியல் அனுபவங்களோ
அரசியல் அறிவு அற்ற நடிகைகளை பிரபல்யம் என்ற ஒரு தகுதியை வைத்து மாத்திரம்; வேட்பாளர்களாக நிறுத்துவதில் கட்சிகள் காட்டும் அக்கறை தொடர்;பில் பல்வேறு விமர்சனங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன. தகுதியுள்ள பலருக்கு
இதன் காரணமாக தேர்தலில் நிற்கும் வாய்ப்பு இல்லாமற் போயுள்ளது. ஆயினு>;ம், தேர்தல் பிரசார மேடைகள் இந்த
நடிகைகளாலும் பாடகர்களாலும் களை கட்டப் போகிறது என்பது மட்டும் உண்மையாகும்.
இதேவேளை,
மாகாண சபை தேர்தலும்;, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலும் ஒரே தடைவையில் நடத்தப்படாமல்
பகுதி பகுதியாக நடத்தபடுவதன்; காரணமாக ஒவ்n;வாரு வருடமும் தேர்தல் வருடமாகவே உள்ளது.
மாகாண சபை தேர்தல் நாடு முழுவதும் ஒரே தடைவையில் நடத்தப்படாமல் காலத்துக்கு காலம் நடத்தபட்டு வருகிறது. ஒரே தடைவையில் தேர்தல்
நடத்தப்பட்டால் அது அரசாங்கத்திறகு
பாதகமாக அமையும் என்பதாலேயே அரசாங்கம் ஒரே
தடைவையில் தேர்தலை நடத்துவதில்லை எனவும். தமது முழு அதிகார பலத்தையும் அரச
வளங்களையும் தவறாகப் பயன்படுத்தி வெற்றியை
பெற்றுக் கொள்ளவே அரசாங்கம் இவ்வாறு
தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துகிறது என
எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் தொட்ரபாக தேர்தல்கள்
ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா (120 கோடி ரூபா) தேவைப்படுவதாகவும் இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கப்
போவதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை மாகாண சபைத் தேர்தலை ஒரு சனிக்கிழமையில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும்,
தென் மாகாண தேர்தலில்
கிட்டத்தட்ட 60 லட்சம் பேர்வரை (58,98,427) இம்முறை வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளதாகவும், தேர்தல்கள் செயலகத்தால் எந்த வேட்பாளரினதும் வேட்பு மனு
அநாவசியமாக நிராகரிக்கப்பட மாட்டாது எனவும், வேட்பு மனு முறையாக பூர்த்தி
செய்யப்படாதிருப்பின் மாத்திரமே நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர்
நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 1400 வாக்களிப்பு மத்திய
நிலையங்களும், கம்பஹாவில் 1315 வாக்களிப்பு மத்திய
நிலையங்களும்< களுத்துறையில் 615 வாக்களிப்பு மத்திய நிலையங்களும, காலியில் 704 வாக்களிப்பு மத்திய நிலையங்களும், ஹம்பாந்தோட்டையில் 405 வாக்களிப்பு மத்திய நிலையங்களும், மாத்தறையில் 440 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படும். எனவும்,
வாக்களிப்பு மத்திய
நிலையங்களுக்கு 55 ஆயிரம் உத்தியோகத்தர்களை
கடமைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும், கடந்த தேர்தலில்
பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இம்முறையும் பயன்படுத்தப்படும்
எனவும்,
வேட்பு மனுவில் போலி
பெயர்கள் இடம்பெறாதிருக்க தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழை
சமர்பிப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த
தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலி;ல் முக்கிய அரசியல் சக்தியாக
உருவெடுத்துள்ள சரத் பொன்சேகாவின் கட்சியும் களமிறங்குகிறது. தேர்தல் வன்முறை
சம்பவங்கள் அதிகம் இடம்பெறலாம் என்பது பொதுவான கருத்தாகவுள்ளது.
இதேவேளை, இந்தத் தேர்தல் தொடர்பில்
மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று 'தமிழ்த் தந்திக்காக' மேல் மாகாணத்திலுள்ள சிலரிடம் கருத்துக்களைக் கேட்டோம். அதனை இங்கு தருகிறோம்.
சட்டத்தரணி நியாஸ்
முஹம்மத் (மாபொல)
மாகாண சபையை இதுவரை முஸ்லிம்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக
மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னுள்ள தேர்தலே மாகாண சபை தேர்தலாகும்.
கல்வி அபிவிருத்தி , வீதி அபிவிருத்தி மாத்திரமே மாகாண சபையால் இடம்பெறுவதி;ல்லை. சிறுவர் நலன்புரி அமைச்சு, சமூக நலன்புரி அமைச்சு,
உட்பட பல அமைச்சுக்கள்
மாகாண சபையில் உள்ளன. இந்த அமைச்சுக்களின் சேவைகள் எமது சமூகத்திற்கு கிடைக்க
வேண்டும். அத்துடன், எமது சமூகத்தின் பிரதிநிதிகள் அதிக எணணிக்கையில் தெரிவு
செய்யப்பட வேண்டும். வடக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தது போன்று முஸ்லிம் மக்கள் முஸ்லிம்
காங்கிரஸிற்கு தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
எஸ்;.
பி.
செல்வம் (நீர்கொழும்பு)
சிறுபான்மை மக்கள் மாகாண சபைக்குள் அதிக எண்ணிக்கையில் தெரிவு செய்யப்படுவதன்
மூலமாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மணோ
கணேசன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர். அவரது கட்சி வேட்பாளர்கள் இந்த முறை கம்பஹா
மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அவரது வேட்பாளர்களுக்கு எமது மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என
நினைக்கிறேன். மாகாண சபை வெள்ளை யானை
என்று சொல்லப்பட்டாலும் அதன் மூலமாக பல நன்மைகள் மக்களுக்கு கிடைத்து வருகின்றமையை
மறுக்க முடியாது
எச். மாபலகம
(நீர்கொழும்பு)
நான் வயோதிபர் சங்கமொன்றின் தலைவராக உள்ளேன். மாகாண சபை உறுப்பினர்கள்
வயோதிபர்கள் தொடர்பாக சிறந்த திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதே போன்று
சிறியவர்கள், பெண்கள் தொடர்பாகவும் ஆக்கப் பூர்வமான செயற்றிட்டங்களை நடை
முறைப்படுத்த வேண்டும்.
எம்.இஸட். சரீனா (ஓய்வு பெற்ற ஆசிரியை, திஹாரிய)
எமது சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்காக நல்ல
தகுதியுடையோரையே நாங்கள் தெரிவு செய்ய வேண்டும். எமது மக்களின் வாக்குகள்
இந்த முறை வீணாகிவிடக் கூடாது. கம்பஹா
மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாக
தெரிவு செய்யப்பட்ட ஷாபி ரஹீம்
அவர்கள் சிறந்த சேவைகளை மக்களுக்கு செய்துள்ளார். அது போன்ற உறுப்பினர்களே
தெரிவு செய்யப்பட வேண்டும். எமது
சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நாங்கள் தயக்கம் இன்றி எமது தேவைகளை
எடுத்துக் கூறி நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
டல்சி பத்தமா பெர்னாந்து (தளுபத்தை)
ஐக்கிய தேசியக் கட்சி;யின் ஆதரவாளராகவும்
செயற்பாட்டாளராகவும் இருந்தேன். பின்னர்
பெண்களுக்கு அந்த கட்சி உரிய இடமளிக்காமை காரணமாகவும் எனக்கு அநீதி
இழைக்கப்பட்டமை காரணமாகவும் , எமது பிரதேசத்திற்கு இன,
மத மொழி பாராமல்
சேவையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினருக்கு ஆதரவளித்து வருகிறேன்.
கம்பஹா உட்பட பல்வேறு மாவட்டங்களிலும்
பல்வேறு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றாலும் மக்கள் பெரும் பொருளாதார கஸ்டத்தின்
மத்தியிலேயே வாழுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி; ஐக்கியப்பட்டு செயற்படாவிட்டால் தொடர்ந்தும் பின்னடைவையே சந்திக்கும்.
ஆதரவாளர்கள் கட்சிமாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
முஹம்மத் அனாஸ் (கொழும்பு)
ஆட்சி மாற்றம் மிக அவசியமாகும். மேல்
மாகாண சபை தேர்தலில் அது ஆரம்பிக்கும் என கருதுகிறேன். யுத்த வெற்றியைக் காட்டி
தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த தேர்தலில் மக்கள் அரசுக்கு
உணர்த்துவார்கள் என நம்புகிறேன். முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில்
நின்றாலும் அரசுடன் இணையாது இருக்க
வேண்டும் என்பதே எல்லோரதும் விருப்பமாகும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின் பேரம் பேசும் சக்தியாகவும், அதேவேளை, தமது சமூகத்திற்காக பதவிகளை
தூக்கி எறிபவர்களாகவும் எமது தலைவர்கள் திகழ வேண்டும். இந்த தேர்தலில் முஸ்லிம், தமிழ்; மக்களின் வாக்கு தீர்க்கமான
ஒரு விடயமாக இருக்கப் போகிறது. ஐக்கிய
தேசியக் கட்சி தேர்தல் தோல்விகளிலிருந்து
விடுபட்டு வெற்றி நடைபோட வேண்டுமாக இருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு உரிய இடம் வழங்;கப்பட வேண்டும்.
எம்.கே. எம். பாரூக் ( திஹாரிய)
அத்தனகல்ல தேர்தல் தொகுதிக்கு ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர் செய்து கொடுத்துள்ளார்.
நான் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராக இருந்தேன். அப்போது இருந்த ஐக்கிய தேசியக் கட்சி
பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் மக்களுக்கு உரிய சேவைகளை செய்யவில்லை. இதன்
காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கனேன்.
மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மூலமாக
சிறந்த சேவைகளை நாம் பெற்றுக்
கொண்டுள்ளளோம். குடி நீர் வசதி , வீதி அபிவிருத்தி, சுய தொழில் செய்வதற்கான
உதவிகள் உட்பட பல வேலைத்திட்டங்களை இதற்கு
உதாரணமாக குறிப்பிட முடியும்.
எம். குமார்
(களுத்துறை)
தேர்தல் தொடர்பாக குறிப்பாக சொல்வதற்கில்லை. எமது மக்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுப்பவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டம். எமது பொருளாதார கஸ்டம் தீர்;க்கப்பட வேண்டும். மக்கள் பணத்திற்கும் மதுவுக்கும், வேட்பாளர்கள் வழங்கும் இலஞ்சத்திற்கும் விலைபோகாமல் தமது பொன்னான வாக்குகளை
பயன்படுத்த வேண்டும்.
எம்.எம்.தௌபீக் (முச்சக்கர வண்டி சாரதி, கொழும்பு)
தேர்தல் அடிக்கடி வந்து போகிறது. ஆயினும் மக்களுக்கு விடிவு பிறக்கவில்லை.
நாளுக்கு நாள் விலைவாசி அதிகரிக்கிறது. மக்கள் பெரும் பொருளாதார பிரச்சினையில்
தவிக்கின்றனர். முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பலர் இப்போது பஸ்களில் பயணம்
செய்கின்றனர். எரிபொருள் விலையும் அடிக்கடி அதிகரிக்கிறது. முன்பு போன்று வருமானம்
கிடைப்பதில்லை. தேர்தல் காலத்தில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் பிறகு எம்மை
மறந்து விடுகிறார்கள். எந்தக் கட்சி
வெற்றி பெற்றாலும் அரசியல் வாதிகள்தான் நன்;மையடைவார்கள். எம்மைப் போன்ற
ஏழைகள் அல்ல. மீண்டும் வீட்டு மதில்களிலும்;
தெருக்களில் உள்ள
சுவர்களிலும் பலவர்ண சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்போதே அது ஆரம்பித்து விட்டது.
மக்களிடம் பல்வேறு வழிகளிலும்
கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபா பணம்
தேர்தல் பிரசாரங்களுக்காக செலவு
செய்யப்படப் போகிறது அவ்வளவுதான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்