பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, February 13, 2014

சூடுபிடிக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைக் களங்கள் - தேசநேசன்

('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 9-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென்மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இலங்கையின்  தேர்தல் வரலாற்றில் மேலும் இரு மாகாணங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது.



 
மேல் மற்றும் தென் மகாண சபைகளில் 155 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3ஆயிரத்து 794 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்
குதித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் சார்பில் 2ஆயிரத்து 441 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1ஆயிரத்து 353 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அதாவது, தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் சார்பில் 81 வேட்புமனுக்களும் சுயேட்;சைக் குழுக்களின் சார்பில் 123 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இரு பிரதான கட்சிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவே தெரிகிறது. வேட்பாளர் தெரிவு தொடர்பாக சில முக்கியஸ்த்தர்கள் மனக்கசப்படைந்த சம்பவங்களும் இடம்பெற்றன.

மாகாண சபை தேர்தல் - 2009

 இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்;ற மேல்மாகாண சபை தேர்தலின் போது கட்சிகள் பெற்ற வாக்குகளையும் உறுப்பினர்களையும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது நல்லது. அந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 68 ஆசனங்களும் எதிர்க்கட்சிகளுக்கு  36 ஆசனங்களும் கிடைத்தன.
ஐக்கிய தேசியக் கட்சி 30 உறுப்பினர்களையும் ஜே.வி.பி. மூன்று உறுப்பினர்களையும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும்; பெற்றன. ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒரு உறுப்பினரை பெற்றது.

களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சகல தேர்தல் தொகுதிகளிலும்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றி பெற்றது.
கொழும்பு மாவட்டத்தில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் பொரள, கொழும்பு மேற்கு, கொழும்பு வடக்கு. கொழும்பு மத்தி , கொழும்பு கிழக்கு ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. ஏலனய தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பறியது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 இலட்சத்து 30 ஆயிரத்தது 370 வாக்குகளை பெற்று 25 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 இலட்சத்து 27 ஆயிரத்து 571 வாக்குகளைப் பெற்று 15 உறுப்பினர்களையும், ஜே.வி.பி. 21ஆயிரத்து  787 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18 ஆயிரத்து 978 வாக்குளை பெற்று  ஒரு உறுப்பினரையும் , ஜனநாய ஐக்கிய முன்னணி 8 ஆயிரத்து 584 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பனரையும் பெற்றன.
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 இலட்சத்து 24 ஆயிரத்து 530 வாக்குகளைப் பெற்று 27 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2 இலட்சத்து 36 ஆயிரத்து 256 வாக்குளைப் பெற்ற பத்து உறுப்பினர்களையும், ஜே.வி.பி 21 ஆயிரத்து 491 வாக்குiளாப் பெற்று ஒரு உறுப்பினரையும,; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18 ஆயிரத்து 14 வாக்குளைப் பெற்று ஒரு உறுப்பினரையும் பெற்றன.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 இலட்சத்து 51 ஆயிரத்து 215 வாக்குகளைப் பெற்று 14 உறுப்பினர்களையும,;  ஐக்கிய தேசியக் கட்சி 1 இலட்சத்து 24 ஆயிரத்து 426 வாக்குகளைப் பெற்று 5 உறுப்பினர்களையும் , ஜே.வி.பி 13 ஆயிரத்து 106 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரையும் பெற்றன.

மூன்று மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 66 உறுப்பினர்களைப் பெற்றது. போனஸ் ஆசனங்கள் இரண்டு  அக்கட்சிக்கு கிடைத்தன.  இதன் காரணமாக அக்கட்சிக்கு 68 உறுப்பினர்கள் தெரிவாகினர்.
இதேவேளை, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9 இலட்சத்து 40 ஆயிரத்து 448 வாக்குகுளைப் பெற்று இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 59 ஆசனங்களை கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 6 இலட்சத்து 36 ஆயிரத்து 998 வாக்குகளைப் பெற்று 39 ஆசனங்களையும, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 70 ஆயிரத்து 733 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் , ஜனநாயக ஐக்கிய முன்னணி 6 ஆயிரத்து 219 வாக்குளையும், மேலக மக்கள் முன்னணி 15 ஆயிரத்து 17 வாக்குகளைப் பெற்று தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.
இந்த இரண்டு தேர்தலில்களையும் (2004 - 2009) ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை 59 இலிருந்து 68 ஆக அதிகரி;த்துக் கொண்ட அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆசனங்களை 39 இல் இருந்து  30 ஆக குறைத்துக் கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆசனங்களையும் நான்கில் இருந்து இரண்டாக  குறைவாகப் பெற்றுக் கொண்டது. 2009 இவ் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண சபை தேர்தல் -2014

 எதிர்வரும் மார்ச்  மாதம்; 29 ஆம் திகதி நடைபெறவுள்ள  மாகாண சபை தேர்தல் சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறுபான்மை உறுப்பினர்களுக்கும் பெரும் சவாலாக அமையப் போகிறது.  மேல்  மாகாணத்தில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த  வாக்காளர்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில்  அதிக எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள்  களமறிங்கியுள்ளனர். சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம், தமிழ் வேட்பாளர்கள் களமறிங்கியுள்ளனர்.
 இதன் காரணமாகஇம்முறை  மேல் மாகாண சபையில் சிறுபான்மையின  பிரதிநிதித்;துவம் குறையுமா? என்ற  கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம் உள்ளது.
இம்முறை கம்பஹா மாவட்டத்தில் முதல் தடைவையாக  ஜனநாயக மக்கள் முன்னணி  தனித்து களமிறங்குகிறது. ஆளும் கட்சி சார்பிலும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு தடைவைகள் தமது பிரதிநித்துவத்தை தக்க  வைத்துக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. அண்மைக் காலமாக முஸ்லிம் மக்களுக்கு  பேரினவாதிகளால் எழுந்துள்ள பிரச்சினைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஆளும் தரப்பு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் சவாலாக அமையும் என்பது அவதானிகளின் கருத்தாகும்.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணி இந்த தேர்தலில் சகல கட்சிகளுக்கும் சவாலாக அமையப் போவது உறுதியாகும.; புதிய தலைமைத்துவத்தின் கீழ்; ஜே.வி.பி. இந்த தேர்தலை சந்திப்பது விசேடமாகும்.
இதேவேளை, தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்;கு முன்னதாகவே தேர்தல்; சட்டங்களை மீறும் வகையிலான  செயல்கள் ஆரம்பித்துவிட்டன.   தொடர்ந்தும் தேர்தல்; சட்டதிட்டங்களை மீறும் சம்பவங்கள் நடைபெறக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. பிரதான கட்சிகளை சேர்ந்த முக்கிய சில வேட்பாளர்கள் பல இலட்சக் கணக்கான ரூபாய் பணத்தை தேர்தல் பிரசார வேலைகளுக்காக செலவிடவுள்ளனர். அதற்கான அறிகுறிகள் வீதியெங்கும் பலவர்ண சுவரொட்டிகள் மூலமாகவும் 'கட்அவுட்' மூலமாகவும்; தெரிகிறது.
தேர்தல் வன்முறைச் சம்பவங்களும்  அதிகளவில் இடம்பெறலாம் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.

இந்தக் கட்டுரை மேல் மாகாண சபை தேர்தலை மட்டுமே குறிப்பாக ஆராய்ந்தது.
எப்படி இருந்த போதிலும்   இந்த தேர்தல் முடியும் வரை பல்வேறு  வாக்குறுதிகளை மக்கள் கேட்கலாம்;. ஒருவர் இன்னொருவரை வசைபாடுவதை  கேட்கலாம். அரசியல்  எனும் சினிமாவிலும் தொடர் நாடகங்களிலும்  நடிக்கவுள்ள நடிகைகளையும் பாடகர்களையும்  பார்க்கலாம்.  வெற்றி  பெற்ற பின்னர் தலைமறைவாக இருந்த அரசியல்வாதிகளை வீட்டு வாசலில் காணலாம். திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகளையும் பார்க்கலாம்.  சினிமா பாட்டுப்பாடும் அரசியல்வாதிகளையும் காணலாம்.  ஆம்! இது ஒரு தேர்தல் காலம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்