பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, February 13, 2014

இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறது -நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து

நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சிபிரதான அமைப்பாளரும்> நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவரும்> மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014 அன்று பிரசுரமானது  

கேள்வி: மேல்> தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. நீங்களும் ஐக்கிய தேசியக் கட்சி;யின் சார்பில்  கம்பஹா மாவட்ட வேட்பாளராக களமிறங்கவுள்ளீர்கள். இந்த தேர்தலில்  ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமா? இந்த தேர்தல் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்; : நிச்சயமாக எமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.  அதற்காக சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இன்று, ஆளும் கட்சி பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு அரசியல்

விளம்பரம் தேட ஆரம்பித்துள்ளது. மேல் மாகாண சபையின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை எடுத்துக் கொண்டால் வாக்குகள்  பெற்றுகொள்வதற்காக இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கைகள் என்றோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
தையல் இயந்திரங்கள் மீன் பிடி உபகரணங்களை வழங்குதல், சுய தொழில் செய்வதற்கான உபகரணங்களை வழங்குதல் என்ற போர்வையில் பலவிதமான பொருட்கள் வழங்;கப்பட்டு வருகின்றன. ஆளும் தரப்பினர் கடந்த நான்கு வருட காலமாக ஆக்கப்பூர்வமாக எதையும்  செய்யவில்லை என்பதாலேயே இவ்வாறு மக்களுக்ககு பொருட்களை  இலஞ்சமாக வழங்கி வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். ஆயினும் மக்களுக்கு இலஞ்சம் வழங்கியும் அதிகார பலத்தை பயன்படுத்தியும் தேர்தல் வன்முறைகளை மேற்கொண்டும் அரசாங்கம் எப்போதும் வெற்றி பெறமுடியாது.

கேள்வி: யானை கூடத்திற்கு கூட தலைவனாக  கொம்பன் யானை  உண்டு. காட்டில் வாழுகின்ற பல மிருகங்கள் தலைமைத்துவத்துடனேயே வாழுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு  தலைமைத்துவம் கிடையாது என்று முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில்  தனியார் தொலைக் காட்சி ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக உங்களது என்ன?

பதில் :  எமது கட்சிக்கு தலைமைத்தவம் ஒன்று இருப்பதும்  தலைமைத்துவ சபை ஒன்று இருப்பதும் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு தெரியாமல் இருக்கலாம். இதற்காக நான் வருந்துகிறேன். எமது கட்சியில் உள்ள பிரச்சினை அது உள்வீட்டுப் பிரச்சினையாகும். முன்னாள் முதலமைச்சருக்கு அவர்களது கட்சியின் கடந்த காலம் தெரியாமல் உள்ளது. 20 வருடகாலமாக  சிறந்த தலைமைத்துவம் இல்லாதிருந்த அவரது கட்சிக்கு சந்திரிகா குமாரணதுங்க வெளிநாட்டிலிருந்து வந்த பின்னரே தலைவர் ஒருவர் கிடைத்தார். அவரது தந்தை காலஞ் சென்ற ரெஜி ரணதுங்கவுக்கு இந்த வரலாறு  நன்கு தெரியும். அவர் அவ்வாறு கருத்து தெரிவிக்கமாட்டார்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி  தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை  மாத்திரமே சந்தித்து வருகிறது. அது ஏன்?

பதில்: பெரும்பாலான ஊடகங்ககள் அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பல ஊடகங்கள் அரசாங்கத்திற்கு கடைக்கு போகின்றன. அரசாங்கம் இந்த ஊடகங்கள் ஊடாக பொய்களை முன்னிலைப்படுத்தியும் யுத்த வெற்றியை தொடர்ந்து காண்பித்தும் போலியான மஹிந்த சிந்தனை ஊடாக பொது மக்களை  ஏமாற்றி  வாக்குளை  பெற்று வருகிறது.  அதனோடு தற்போது கட்டுநாயக்க அதிவேகப் பாதை> தெற்கு அதிவேகப் பாதை என்பவற்றையும் கூறி மக்களை மேலும் ஏமாற்றுகிறது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்று பத்திரிகைகளோ  இலத்திரனியல் ஊடகங்களோ கிடையாது. அரசாங்கத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்ளுமகாலம் தற்போது வந்துள்ளது.
 போர் குற்ற விசாரணை என்ற பெயரில் ஜனாதிபதியை  மின்சார நாற்காலியில் அமர்த்திவிடுவார்கள் என்று கூறி  கிராம மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது. 17 ஆவது அரசியலமைப்பின் ஊடாக தேர்தல் ஆணைக் குழு > பொலிஸ் ஆணைக் குழு > சுயாதீன ஊடக ஆணைக் குழு  உட்பட சகல ஆணைக் குழுக்களையும் நியமித்த பின்னர் தேர்தலை நடத்தினால் இந்த அரசாங்கம் 24 மணித்தயாலங்களில் வீடு செல்ல நேரிடும்.

கேள்வி: முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு  பொதுபலசேனா. ஹெல உருமய போன்ற அமைப்புக்களினாலும் கட்சிகளினாலும்  பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் மக்கள் சார்பாக என்ன நடவடிக்கை எடுத்தது?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரிலேயே ஐக்கியம் உள்ளது. சகல இன. மத> மொழி மக்களையும் எமது கட்சி அரவணைத்து செல்கிறது. எமது கட்சி சகல மக்களினதும் ஒற்றமையை வலியுறுத்கிறது. சகல மக்களையும் சமமாகவே நடத்துகிறது. நூங்கள் கடந்த காலங்களில் அதனை நிரூபித்துக் காட்டியுள்ளோம்.  எமது ஆட்சியின் கீழ் பிரதான பதவிகளில் தமிழ்  மற்றம் முஸ்லிம்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். சுகல இன மக்களையும் கருத்தில் கொண்டே அபிவிருத்தி  வேலைத்திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹிந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறது. பொது பலசேனாவை உருவாக்கியது யாh? ஆரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பிரதான எதிர்கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்னர் ஹெல உருமய அதனை மேற்கொள்கிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த அமைப்புக்களும் கட்சிகளும் செயற்படுகின்றன.
எமது கட்சத் தலைவர் ரணில் விக்கரம சிங்க தமிழ் மக்களுக்காக குரல் கொடுததுள்ளது போன்று முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். முஸ்லிம் மக்களை எமது கட்சி ஒரு போதும் கைவிடாது. சிறுபான்மை மக்களிக் உரிமைகளுக்காக எமது கட்சி எப்போதும் குரல்கொடுக்கும். அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன்?;

கேள்வி: அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வீதிகள், மேம் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சமாதானம் நிலவுகிறது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: அரசாங்கத்திடம் சிறந்த திட்டம் கிடையாது. தனது பக்கட்டுக்களை நிரப்பும் திட்டங்களே உள்ளன. அன்று  எமது கட்சி ஆட்சியிலிருந்த போது பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு உதவிகளையும் நன்கொடைகளையும் பெற்றே அவை மேற்கொள்ளப்பட்டன. இந்த அரசாங்கத்தை போன்று   கடன் பெற்று அல்ல.  இந்த அரசு நாட்டு மக்களை  பெரும் கடன்காரர்களாக ஆக்கியுள்ளது
 ஐக்கிய தேசியக் கட்சி;யின்  ஆட்சியின் போது திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செயது வைக்கப்பட்டது. விவசாயிகள், சிறு கைத் தொழில் துறையில் ஈடுபடுவோர், அரசாங்க ஊழியர்கள் உட்பட சகல தரப்பினரும் எமது ஆட்சியின் போது நன்மை  அடைந்தனர். மகாவலி அபிவிருத்தி > சுற்றுலாத்துறை அபிவிருத்தி> சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படல்கைத் தொழிற்துறை அபிவிருத்தி > கிராம அபிவிருத்திஎன பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது  ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இந்த அரசாங்கம் சாதாரண மக்களுக்காக என்ன அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டது. கப்பல் வராத துறைமுகத்தையும்விமானம் வராத விமான நிலையத்தையும் அமைத்துள்ளது. மக்களுக்கு கடும் பொருளாதார கஸ்டத்தை  கொடுத்துள்ள அரசு மக்களிடம் அதிக வரிகளை பெற்றுக்  கொண்டு  ஆட்சி செய்கிறது.
அமைதி நிலவுதாக கூறப்பட்டாலும் நாட்டு மக்களின் உள்ளங்களில் அமைதி இல்லை . மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியி;ல் அமைதி > நிம்;தி இன்றி வாழ்கிறார்கள். பலர் பட்டினியோடு வாழ்கிறார்கள்.

கேள்வி:  எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம் பெறவுள்ள   ஐ.நா மனித உரிமை பேரவையின் போது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

 பதில்: பிரச்சினையை உருவாக்கிக் கொண்டது அரசாங்கம்தான். சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு அன்று இடமளித்திருந்திதால் இந்த பிரச்சினை ஏற்பட்;டிருக்காது. யுத்தம் செய்யும் போது இருபக்கமும்  இழப்புக்கள் ஏற்படுவது சகஜம். அதனை தவிர்க்க முடியாது. இது உலக வரலாறாகும்.
சர்வதேசத்தின் கோரிக்கையை நிராகரிக்காமல் 36 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போது  அப்பாவி பொது மக்களுக்கு  புலிகளால்  இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களிலும் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட   அழிவுகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு காட்டியிருக்க வேண்டும். புலிகளினால் முஸ்லிம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டமை. பள்ளிவாசல்களில் வைத்து கொலை செய்யப்பட்டமை, சிங்கள மக்கள் கிராமங்களில் கொன்று குவிக்கப்பட்டமை போன்றவை  வெளிநாடுகளுக்கு காண்பித்திருக்க வேண்டும். 
ஜெனரல் சரத் பொன்சேகா யுத்தத்தை  தனது ஆளுமை மிக்க திறமையினால் முடிவுக்கு கொண்டு  வந்தார். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சவால் அவரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆயினும் அரசாங்கம் என்ற அடிப்படையில் யுத்த வெற்றியின் பின்னர் எழுந்த சவால்களை  ஜனாதிபதியால் முறியடிக்க முடியவில்லை. காரணம் அரசாங்கத்திடம் சிறந்த ராஜ தந்திரம் கிடையாது.  திட்டங்கள் கிடையாது.
சர்வதேச ரீதிய்ல் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியை சாடுவதில் பயனில்லை. அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜெனீவாவுக்குச் சென்று முறைப்பாடு செய்தார். இன்று ஜனாதிபதிக்கு எதிராக ஜெனீவாவில்  முறைப்பாடு செய்யப்படுகிறது.


கேள்வி: இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நடைபெறவுன்ன மாகாண சபை தேர்தலில் மக்கள் எமது கட்சிக்கு வாக்குகளை அளித்து  எமது கட்சியை வெற்றி பெறச் செய்து தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கம்பஹா மாவட்டத்தில் எமது கட்சிக்கும் எனக்கும் வாக்குகளை அளித்து என்னை மாகாண சபை உறுப்பிராக தெரிவு செய்தால் சிறந்த சேவையை எமது மக்களுக்கு ஆற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்