பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, December 23, 2015

மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்

உலகிற்கு அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஜனன தினம் இன்றாகும்.
 முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை  சரித்திரம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Friday, November 27, 2015

கட்டானை கந்தவலை பிரதேசத்தில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட  200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட  60 அடி உயரமான இந்த கோபுரம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Saturday, November 21, 2015

பிரதேச, மாவட்ட சாகித்திய விழா போட்டிகளில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு நான்கு பரிசில்கள்

 நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன.

  திறந்த போட்டிப் பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்கம் ஆகிய போட்டிகளிலேயே  எனக்கு   இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக (2015) நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும்  அடியேனுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 

Friday, November 13, 2015

திரும்பிப்பார்க்கின்றேன். முஸ்லிம் சகோதரர்களே அல்லாவின் நாமத்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள். யாழ்ப்பாணம் உங்களை அழைக்கட்டும். முஸ்லிம் வட்டாரத்தில் உங்கள் பாங்கோசை ஒலிக்கட்டும். இரண்டு குழந்தைகள் உலகிற்குச்சொன்ன ஞானோபதேசம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

எமது  ஊரில்  எமது  வீட்டுக்கு  அருகாமையில்  காமாச்சோடை   என்ற இடம்   இன்றும்  அதேபெயருடன்  அழைக்கப்படுகிறது.   கடற்கரையை அண்டியிருக்கும்    இந்த  இடத்தில்தான்  பள்ளிவாசல்,   முஸ்லிம்  பாடசாலை,   மீன்கடை,   கூட்டுறவுச்சங்கத்தின்  அரசிமூடைகள்  பாதுகாக்கப்படும்    பெரிய  களஞ்சிய  மண்டபம்,   மரக்கறி  சந்தை, இறைச்சிக்கடை,    கிங்ஸ்   தியேட்டர்   , கள்ளுத்தவறணை,   விளையாட்டு மைதானம்   யாவும்  இருந்தன.
ஒருகாலத்தில்  இந்த  இடத்தில்  அமைந்திருந்த  ஒரு  காமாட்சி  அம்மன் கோயிலை   கடலால்  வந்து  ஆக்கிரமித்த  போர்த்துக்கீசர்  இடித்துவிட்டனர். அதன்  சுவடே   மறைந்துவிட்டதாக  எனது  பாட்டி  சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது   அவ்விடத்தில்  நிறைய மாற்றங்கள்  நேர்ந்துவிட்டன.
மீன்கடை,    இறைச்சிக்கடை,    அரிசிக்களஞ்சியம்,   கிங்ஸ்  தியேட்டர்  என்பன மறைந்துவிட்டன.   ஆனால்,  இன்றும்  அங்கே  பள்ளிவாசலும், பாடசாலையும்    இயங்குகின்றன.    பள்ளிவாசல்  தெருவில்    காலாதிகாலமாக   முஸ்லிம்  மக்களும்   செறிந்துவாழ்கிறார்கள்.

Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா

 ( நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)   

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!

Tuesday, September 29, 2015

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழா -2015 இல் எனக்கு 3 பரிசுகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன்  இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான  வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக உரையாற்றினார்.

Wednesday, July 29, 2015

உலக நிலா உதிர்ந்தது

(டாக்டர் அப்துல் கலாம் மறைவு 27-7-2015)

உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!

கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....

ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.

'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது
பாரதம் துறந்து!

கனவு காண
கற்றுத் தந்த
கனிந்த இதயம்
கனவாகிப் போனது.
எங்கள்
நினைவாகிப் போனது.

Sunday, July 19, 2015

புனித ரமழானை மறவோமே!




இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!

Saturday, July 18, 2015

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.

Friday, May 15, 2015

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்

 கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில்  சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை  (15-5-2015) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் (எனது) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்களான ஜெகநாதன், எம். ஏ. சில்வா, காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.
ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன்  மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர்  சிறப்பான சித்திகளைப் பெற்ற மாணவிகளான ஆர். கலைவதனி  , ஆர். தருஷிகா ஆகியோருக்கு பதக்கம் அணிவித்தும் பரிசில் வழங்கியும் கௌரவித்தனர்.

Wednesday, April 22, 2015

நீர்கொழும்பில் நடைப்பெற்ற ‘மொட்டைக் கடிதம்’ குறுந்திரைப்பட அறிமுக விழா

 நீர்கொழும்பு  எஸ்.எஸ். ட்ரீம் சினிமா (SS  Dream cinema) சார்பில் . ஆர். சிவலிங்கம்,  ஜி. சசிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘மொட்டைக்கடிதம்குறுந்திரைப்பட அறிமுக விழா கடந்த (19-04-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர்  கலாசார மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஸ்ரீகுகேஸ்வர குருக்களின் பூஜை  மற்றும் ஆசியுரையுடன் விழா அரம்பமானது. இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் அறிமுக விழாவைப் பற்றி விளக்கமாக உரையாற்றினார். குறுந் திரைப்படங்களைப் பற்றி மு.ஜெயகாந்தன் சிறப்பாக உரையாற்றினார்.

Saturday, April 18, 2015

சக்தி தொலைக்காட்சியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சியில் Kalanenjan Shajahan


 சித்திரைப் புத்தாண்டு அன்று (14-4-2015) சக்தி தொலைக்காட்சியில் காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரை ஒளிபரப்பான  'குட்மோர்னிங் சிறிலங்கா' நிகழ்ச்சியில் நான் பங்கு பற்றினேன். நிகழ்ச்சியில் அடியேன் கவிதை வாசிக்கும் காட்சி இது.






Sunday, March 15, 2015

நீர்கொழும்பில் இடம்பெற்ற 'நெய்தல்' நூல் வெளியீட்டு விழா

                        
நீர்கொழும்பு  விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி  பழையமாணவர்   மன்றத்தின்    ஏற்பாட்டில்  அண்மையில் (28-2-2015) கல்லூரி மண்டபத்தில்     நெய்தல்  நூல்  வெளியீட்டு  விழா  நடைபெற்றது.
1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  கல்லூரியின்  வைரவிழாவை        முன்னிட்டு    கல்லூரியின்   முதல்   மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான     அவுஸ்திரேலியாவில்     வதியும்  லெ.முருகபூபதி    தொகுத்த  நெய்தல்  நூலில்  கல்லூரியின் முன்னாள்    மாணவர்கள்,    அதிபர்கள்,   ஆசிரியர்கள்  எழுதிய கட்டுரைகள்,   சிறுகதைகள்,   கவிதைகள்ஆய்வுகள்  இடம்பெற்றுள்ளன.