பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 28, 2013

'காவிய பிரதீப' பட்டம் தொடர்பாக - வீரகேசரி பத்திரிகை செய்தி.

அகில இலங்கை கவி சம்மேளனத்தினால் அடியேனுக்கு 'காவிய பிரதீப' பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பாக வீரகேசரி  பத்திரிகையில் இன்று சனிக்கிழமை (28-12-2013) இடம்பெற்றுள்ள  செய்தி.


Wednesday, December 25, 2013

மஹா ஓய 'வெந்நீர் ஊற்று கிணறுகள்’

கிழக்கு மாகாணத்தின் மஹா ஓய பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று கிணறுகளைப் பார்ப்பதற்காக அடியேன் கடந்த செவ்வாய்க்கிழமை  சென்ற போது எடுத்த படங்கள் இவை. அங்கு ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Wednesday, December 18, 2013

சென்னையில் நடைபெற்ற ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூல் அறிமுகவிழா.

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது.

Monday, December 16, 2013

சிறுகதையில் இரண்டாமிடம்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் அடியேனுக்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இற்கான பரிசளிப்பு நிகழ்வு (13-12-2013) வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான

Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது


ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது.

Friday, November 15, 2013

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு 75 அடி நீளமான பட்டம்

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு   நீரகொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள வாலிப குற்றவாளிகள் சீர்த்திருத்த நிலையத்தில் 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது.

சீர்த்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை

Friday, November 8, 2013

தேசிய கல்வி நிருவக கல்வி முதுமாணி மாணவர்களின் பிரியாவிடை வைபவம்

தேசிய  கல்வி நிருவகத்தில் கல்வி முதுமாணி உயர் பட்டப் பாடநெறியை தொடர்ந்த 2012 - 2013 கல்வி ஆண்டு மாணவர்களின் ஒன்று கூடல்; மற்றும் பிரியாவிடை வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை (8-11-2013) முற்பகல் தேசிய  கல்வி நிருவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Saturday, October 26, 2013

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

 'மூவிதழ்; மலர்'  என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்

Saturday, October 12, 2013

புனித ஹஐ் பெருநாள்

இன்றைய 13-10-2013 'தமிழ்த் தந்தி' வாரப் பத்திரிகையில் புனித ஹஐ் பெருநாளையிட்டு எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.


Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு

Sunday, September 22, 2013

சாகித்திய விழாவில் பரிசு பெற்மை தொடர்பாக பத்திரிகைகளில் பிரசுரமான செய்திகள்

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் அடியேன் பரிசு பெற்றமை தொடர்பாக வீரகேசரி மற்றும் தமிழ்த் தந்தி’ பத்திரிகைகளில் 21-9-2013 மற்றும் 22-9-2013 அன்று பிரசுரமான செய்திகள்.

Thursday, September 12, 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா- 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை(12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

பிரதேச இலக்கிய கலை பெருவிழாவில் கலாநெஞ்சனுக்குப் பரிசு

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை (12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்

 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான கவிதை 


நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் பரிசு


 மெட்ரோ நிவ்ஸ்’ பத்திரிகையில் 5-9-2013 அன்று பிரசுரமான செய்தி


Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே

Wednesday, August 7, 2013

ரமழானின் போதனைகளை நாளும் கடைப்­பி­டிப்போம்



('ரம­ழானின் போத­னை­களை நாளும் கடைப்­பி­டிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)



  

அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் இனிய வாழ்த்துக்கள்


Sunday, August 4, 2013

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை



உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Saturday, August 3, 2013

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2-8-2013) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரடைஸ் பெலஸ் உற்சவ மண்டபத்தில் இடம்பெற்றது.

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்" இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

Thursday, July 25, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு


 
பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

Sunday, July 21, 2013

இரண்டு வருடமாக வெடிப்படைந்து வடிந்தோடிக் கொண்டிருந்த குடிநீர் விநியோகக்; குழாய் திருத்தப்பட்டது: ஊடகவியலாளருக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு - தலாதீவு கருமாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள வீதியோரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்ததன்காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர்; வீணாய் வீதியோரத்தில் வடிந்தோடுவதாக கடந்த புதன் கிழமை (17-7-2013) தொலைக்காட்சியில் ‘நிவ்ஸ்ட் பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர்’

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற

Sunday, June 2, 2013

காலத்தை வென்ற குரல் காற்றோடு கலந்தது

(இக்கவிதை 2-6-2013, இன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)





காற்றோடு
கலந்தது
தமிழ்;பாட்டுக் குயில்!

அரை நூற்றாண்டாய்
தமிழ் சினிமா
இசை உலகையாண்ட
சிம்மக் குரல்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

பாட்டுக்கு உயிர் கொடுத்த
இசைக் குயில்
அதன் பாட்டுக்கு
பறந்து விட்டது
இசை உலகைவிட்டு!

Friday, May 24, 2013

'பிரைவேட் பஸ்" (சிறுகதை)


     
-      கலாநெஞ்சன் ஷாஜஹான்

'பஞ்சிகாவத்த...மருதான.... டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின் குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.

Friday, May 17, 2013

நீர்கொழும்பில் விபசாரிகளுக்கு ‘அசிட்’ வீச்சு எச்சரிக்கை சுவரொட்டிகள்


நீர்கொழும்பு நகர வர்த்தகப் பிதேசங்களின் சில இடங்களிலும் குறிப்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாகவும் விபசாரிகளுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள 'அசிட் வீச்சு' எச்சரிக்கை சுவரொட்டிகள் காரணமாக வீதியோர விபசாரிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, May 1, 2013

சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு பரிசு



 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் அபுதாபியை சேர்ந்த கவியன்பன் கலாம் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

Saturday, April 27, 2013

மின்சாரம் அது சம்சாரம்


(இக்கவிதை   (28-4-2013 ) "தமிழ் தந்தி" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது 


'கரன்ட் பில்' ஏறிபோச்சு
'கரன்ட்' பட்ட நிலையாச்சு
இருட்டுக்குள் வாழும் காலமாச்சு
வரண்டு போல நிலம் போல ஆச்சு

மின்னல் போல மின்சாரம் தாக்கியாச்சு
இன்னல் மழை பொழியும் வானமாச்சு
குப்பி விளக்கின் மவுசு கூடிபோச்சு
குப்பை போல வாழ்க்கையானதாச்சு


Saturday, April 20, 2013

இரு நூல்களின் ஆய்வரங்கு



தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' , சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள் ' ஆகிய நூல்களின் ஆய்வரங்கு எதிர்வரும் (ஏப்ரல); 28 ஆம் திகதி,  ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு 58,  தர்மாராம வீதி,  கொழும்பு 06. இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Wednesday, April 3, 2013

சட்டத்தை கையில் எடுத்துள்ள பொது பலசேனாவும் பேரினவாதிகளும்


- எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed

இலங்கை முஸ்லிம்களுக்கு சோதனைகளும் வேதனகளும் மிகுந்த காலம் இது. நாளுக்கு நாள் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு

Saturday, March 30, 2013

Fashion Bug வர்த்தக நிலையம் மீது பேரினவாதிகளின் தாக்குதல் (வீடியோ)


பெப்பிலியான நகர வர்த்தக நிலையம்  (Fashion Bug) மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி (28-3-2013) நூற்றுக்கும் மேற்பட்டோர்  அடங்கிய குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சில மணித்தியாலங்களாக  இந்த தாக்குதல் இடம்பெற்ற போதும்

Friday, March 29, 2013

நீர்கொழும்பில் பாஸ்கு நாடகம் (படங்கள்)


 சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை தினம் நேற்று (29-3-2013) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்களின் 'அபாயாவும்' பேரினவாதிகளின் எச்சரிக்கை மணியும்


-     எம்.இஸட். ஷாஜஹான் B.Ed 

     (கலாநெஞ்சன்  ஷாஜஹான்   )       

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சி;யான விடயங்கள் முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள்  தொடர்ச்சியாக  அடிக்கப்பட்டு வருகின்றன.

Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

'சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும்'




-     கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் அதிர்ச்சி  தகவல்கள்  வெளிவந்து  கொண்டே  இருக்கின்றன.

சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும்  சிறுவர் உரிமைகள் பல்வேறு  வகைகளிலும்  மீறப்படல் என்று  கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Saturday, March 9, 2013

நீர்கொழும்பு பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு


சர்வதேச மகளிர் தினத்தையிட்டு நீர்கொழும்பு பொலிஸார்   நடத்திய மகளிர் தின நிகழ்வு  இன்று சனிக்கிழமை (9-3-2013) நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையம், ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையம் ஆகியன

அபூர்வ அண்ணாசிக்காய்


அபூர்வமான அண்ணாசிக்காய் ஒன்று வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் விற்பனைக்கான வைத்திருந்தார். 


கொஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள அண்ணாசி தோட்டத்தில் இந்த அண்ணாசிக்காய் கிடைத்தததாக அந்த வியாபாரி தெரிவித்தார்.

Tuesday, January 29, 2013

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய நபிபெருமானார் புகழ்பாடல் (பாடல் இணைப்பு)



இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் நினைவு தினத்தையிட்டு (25.1.2013 ) முஹம்மத் நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது ´லாயிலாஹ இல்லல்லாஹ்´´ ஆரம்பிக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய பாடல். 

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா




ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Sunday, January 13, 2013

கொழும்பில் நடந்த மூன்று மொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீடடு விழா


 இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழி பெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க

Wednesday, January 9, 2013

பூவுக்கு வைத்தார்கள் நெருப்பு!


  
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !